செய்திப்பிரிவு

Published : 13 Sep 2019 08:50 am

Updated : : 13 Sep 2019 08:50 am

 

எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார்- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தகவல்

h-raja-speech

புதுக்கோட்டை

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறி யது: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைப் போன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார். தமிழக அரசு நீர் மேலாண்மையில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். நாட்டில் உள்ள வங்கி களையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தவர் சிதம்பரம். அவ ருக்கு ஆதரவாக ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளது வேதனைக் குரியது. உண்மையான விவசாயி களுக்கு நகைக் கடன் வழங்கு வதற்காக மத்திய அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதை, எதிர்க்கட்சிகள் தவறாக சித்தரித்து மக்களைப் பீதியடைய செய்கின்றன.

பச்சை துண்டு போட்டவர்கள் அனைவரும் விவசாயிகள் அல்ல, நிலத்தில் விவசாயம் செய்பவர் களே விவசாயிகள் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர்பாஜக தேசிய செயலாளர்எச்.ராஜாதமிழக அரசு நீர் மேலாண்மையில்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author