

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள தீவு கிராமமான மேலராமநல்லூர் கிராமத்தில், செல்வவிநாயகர், வீரஆஞ்சநேயர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கபிஸ்தலம் பகுதி சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்லும் நிலை யில், கும்பாபிஷேகம் முடிந்து 41 பேர் பயணித்த ஒரு படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில், நீச்சல் தெரிந்தவர்கள் மற்ற வர்களை மீட்டு அருகில் உள்ள மணல் திட்டுகளில் சேர்த்தனர். இவ்வாறு 38 பேர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் மட்டும் மாய மானது தெரியவந்தது.
இந்நிலையில், பட்டுக்குடி சுயம் பிரகாசம்(55), கருப்பூர் ரா.ராணி (45), நாயக்கர்பேட்டை பழனி சாமி(50) ஆகியோர் கும்பாபிஷே கம் முடிந்து வீடு திரும்பாதது தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளிடம் ஆற்றில் நேற்று தேடும் பணி நடைபெற்றது.
அப்போது, ராணியின் சடலம் அணைக்கரையில் மீட்கப்பட்டது. மற்ற இருவரையும் தேடும் பணி நடைபெற்றது. தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரை, அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் மீட்புப் பணி களை கண்காணித்து வருகின்ற னர்.
வேளாண் அமைச்சர் இரா.துரைக்கண்ணு வடசருக்கை மற்றும் மேலராமநல்லூர் கிராமங் களுக்குச் சென்று தேடுதல் பணி நடைபெறுவதைப் பார்வை யிட்டார். மீட்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.