Published : 13 Sep 2019 08:44 AM
Last Updated : 13 Sep 2019 08:44 AM

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த ஆடம்பரத் திருமணம்: பக்தர்கள் கடும் அதிருப்தி

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அலங்காரங்கள்.

கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங் கால் மண்டபத்தில் வெகு விமரி சையாக நடைபெற்ற தொழிலதிபர் ஒருவரின் இல்லத் திருமண விழா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் உலக பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாகும். சுமார் இரண்டா யி்ரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாகவும் இக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

பல்வேறு சிறப்புகளை கொண்ட நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ராஜ சபை என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் ஆனித் திருமஞ்ச னம், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன உற்சவத்தின்போது நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளி மகா அபிஷேகம், லட்சார்ச்சனை ஆகி யவை நடைப்பெறும். அப்போது திருவாபரண அலங்காரத்தில் சுவாமி, அம்பாளும் அருள்பாலிப் பர்.

இக்கோயிலில் வழக்கமாக வடக்கு கோபுரம் அருகில் உள்ள பாண்டியநாதர் சந்நிதியில்தான் திருமணம் நடைபெறுவது வழக் கம். ஆயிரங்கால் மண்டபம் ராஜ சபை, புனிதமான இடம் என்பதால் ஆன்மிக நிகழ்ச்சிகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுவது இல்லை.

கோயிலுக்குள் அலங்காரங்கள்

இந்நிலையில், சிவகாசி பட்டாசு நிறுவன பங்குதாரர் ஒரு வரின் இல்ல திருமண விழா ஆயிரம் கால் மண்டபத்தில் நேற்று முன் தினம் நடந்துள்ளது. அப்போது, ஆயிரங்கால் மண்டபம் மின் விளக்குள், மலர் தோரணங்கள், வண்ண சீலைகள் ஆகியவற் றால் பிரம்மாண்டமாக அலங் கரிக்கப்பட்டு இருந்தது. இப் பகுதியில் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், திருமண பேட்ஜ் அணிந்தவர் கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட தாகவும் தெரிகிறது. நேற்று காலை யும் இந்த ஆடம்பர அலங்காரங்கள் அப்படியே இருந்தன.

ஆயிரங்கால் மண்டபத்தில் இதுவரை எந்த திருமண விழாவும் நடைபெறவில்லை என்று கூறப் படும் நிலையில், அங்கு முதன் முறையாக திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் அனுமதி அளித் தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடராஜர் கோயில் பொது தீட்சி தர்களின் செயலாளர் பாலகணேச தீட்சிதரிடம் இதுகுறித்து கேட்ட போது, “இதில் தனிப்பட்ட முறை யில் நான் கருத்து கூற விரும்ப வில்லை” என்றார்.

தீட்சிதர் விளக்கம்

திருமண ஏற்பாடுகளை செய்த பட்டு தீட்சிதர் கூறும்போது, “நடராஜர் சபை முன்புதான் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கோயில் வளாகத்தில் உள்ள சிறிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்ததால், நாட்டிய நிகழ்ச்சிக்காக ஆயிரங்கால் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் திருமணம் நடத்தப்பட்டது.

நாட்டிய நிகழ்ச்சிக்காகத்தான் ஆயிரங்கால் மண்டபம் அலங்கரிக் கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் அங்கு நடத்தப்பட்டது. கீழ் பகுதியில் கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர்கள் உட்பட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது” என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x