Published : 13 Sep 2019 07:56 AM
Last Updated : 13 Sep 2019 07:56 AM

சென்னை குடிநீருக்காக கிருஷ்ணா கால்வாய் ஆய்வு: கண்டலேறு அணையில் இருந்து விரைவில் கிருஷ்ணா நீர் திறக்க வாய்ப்பு

திருவள்ளூர்

சென்னை குடிநீருக்காக கண்ட லேறு அணையில் இருந்து விரை வில் கிருஷ்ணா நீர் திறக்க வாய்ப் புள்ளதால், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாய் பகுதிகளை பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதாரப் பிரிவின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் ஆய்வு செய்தார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய முக்கிய ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகின் றன. இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பெய்த மழையால், கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஆந்திர மாநிலத் தில் உள்ள சோமசீலா அணையில் இருந்து, கண்டலேறு அணைக்கு நேற்று முன்தினம் ஆந்திர அரசு கிருஷ்ணா நீரை திறந்துவிட்டது. தொடக்கத்தில் விநாடிக்கு 4,000 கனஅடி என திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 7,600கன அடியாக அதிகரிக்கப்பட்டுள் ளது.

இதற்கிடையே, தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் வழங்கவேண்டும் என, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச் சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

ஆந்திர மாநில அரசு, சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணை யில் இருந்து, விரைவில் கிருஷ்ணா நீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வாய்ப்புள்ளது. இதனால், தமிழக பகுதியில் உள்ள கிருஷ்ணா கால் வாயில் உள்ள செடி, கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் கடந்த சில நாட் களாக நடைபெற்று வருகின்றன.

தமிழக பொதுப்பணித் துறை யின் நீர்வள ஆதாரப் பிரிவின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் நேற்று கிருஷ்ணா கால்வாய் பகுதிகளை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயின்ட் முதல், பூண்டி ஏரி வரை சுமார் 25 கி.மீ. தூரம் உள்ள கிருஷ்ணா கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை ஆய்வு செய்தவர், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் வீணாகாமல், பூண்டி ஏரிக்கு செல்லும் வகையிலான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட கோட்டம்-1-ன் செயற்பொறியாளர் மரியஹென்றி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் சுப்பாராவ், உதவி பொறியாளர்களான பிரதீஷ், சதீஷ், பழனிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x