

சென்னை
இருவழிப் பாதையாக மாற்றப்பட்ட அண்ணா சாலையில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ பணிகள் நிறைவடைந்த சாலைப்பகுதிகள், இருவழிப் பாதையாக மாற்றப்பட்டன. எல்ஐசி முதல் ஆயிரம் விளக்கு இடையே உள்ள சாலை மட்டும் இருவழிப் பாதையாக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் அங்கும் மெட்ரோ பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் இருவழிப்பதையாக மாற்றப்பட்டது. 11-ம் தேதி அரசு விடுமுறை என்பதால் வாகன போக்குவரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று வழக்கம்போல அண்ணா சாலையில் வாகனங்கள் வரவே, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய நெரி சல், மாலை 3 மணி வரை நீடித்தது. தாராப்பூர் டவர் பகுதி முதல் சைதாப்பேட்டை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
எல்ஐசி முதல் ஆயிரம்விளக்கு வரை உள்ள பகுதியில் அண்ணா சாலையுடன் இணையும் சாலை களான ஜி.பி.ரோடு, ஒயிட்ஸ் ரோடு, உட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு, பீட்டர்ஸ் ரோடு ஆகிய சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் செல்வதற்கு முறையான வழிமுறைகள் இல்லாத தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சாலை களுக்கு இடையே இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் திரை யரங்குகளுக்கு வசதியாக ஒரு வழி மற்றும் இரு வழி பாதைகள் மாற்றப்பட்டதால், நேற்று கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட தாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
எல்ஐசி முதல் ஆயிரம்விளக்கு வரையுள்ள அண்ணா சாலை யில் தற்போது சென்டர் மீடியன் சுவர், சாலை ஓரத்தில் நடந்து செல் பவர்களுக்கான இடவசதி, சிக்னல் கள், பேருந்து நிறுத்தத்துக்கான இடவசதி, நிழற்குடை போன்ற பணி கள் இன்னும் முழுமை அடையாமல் உள்ளன. இவற்றையும் விரைவில் சரிசெய்ய வேண்டும். மேலும் தியேட் டர்களுக்கு செல்லும் பாதைகளிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.