Published : 13 Sep 2019 07:30 am

Updated : 13 Sep 2019 07:30 am

 

Published : 13 Sep 2019 07:30 AM
Last Updated : 13 Sep 2019 07:30 AM

அவசியம் ஏற்பட்டால் காரணங்களை வெளியிட கொலீஜியம் தயார்; ஒருமித்த கருத்து அடிப்படையில்தான் நீதிபதிகள் இடமாற்றம்: உச்ச நீதிமன்ற செக்ரட்டரி ஜெனரல் அறிக்கை

sc-collegium-statement

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளின் இடமாற்றத்துக்கான காரணங்களை அவசியம் ஏற்பட்டால் கொலீஜியம் வெளியிட தயாராக உள்ளது என உச்ச நீதிமன்ற செக்ரட்டரி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அங்கு பணிபுரிந்த ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த இடமாறுதல் பரிந்துரையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வி.கே.தஹில்ரமானி விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங் கிய கொலீஜியம் நிராகரி்த்தது. இந்த சூழலில் வி.கே.தஹில் ரமானி தனது தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலை வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் வி,கே.தஹில்ர மானிக்கு ஆதரவாக தமிழகம் முழு வதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். உச்ச நீதிமன்ற கொலீஜி யத்தின் நடவடிக்கைகளையும் குற் றம் சாட்டினர். தஹில் ரமானியின் இடமாற்றம் தொடர்பாக குஜராத் கலவர வழக்கை விசாரித்து தீர்ப் பளித்தார் என்றும், பொன்மாணிக்க வேல் விவகாரத்தில் தமிழக அரசு டன் இணக்கமான போக்கை கடை பிடித்தார் என்றும் நீதித்துறையைத் தாண்டி அரசியல் ரீதியாகவும் பல் வேறு சாயம் பூசப்பட்டு வருகிறது.

ஆனால் தனது பணியிட மாறுதல் குறித்தோ அல்லது தனது ராஜி னாமா குறித்தோ நான் எந்த கருத் தையும் தெரிவிக்க விரும்பவில்லை எனக்கூறி வி.கே.தஹில்ரமானி இதுவரை அமைதி காத்து வரு கிறார். அவர் சென்னையில் உள்ள தலைமை நீதிபதிக்கான பங்களா வில் தான் தற்போதும் குடியிருந்து வருகிறார். ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நாள் முதல் உயர் நீதிமன்றத்துக்கு வரு வதை தவிர்த்து விட்டார். செப்,9-ம் தேதி மட்டும் தலைமை நீதிபதி பெயரில் வழக்குப்பட்டியலை வெளியிட்ட உயர் நீதிமன்ற பதிவுத்துறை, அவர் வரவில்லை என தெரிந்ததும் இரண்டாவது அமர்வுக்கு அந்த வழக்குகளை மாற்றியது. தற்போது வரை தலைமை நீதிபதி யார் என தெரியா மல், முதல்அமர்வுக்கான வழக்குப் பட்டியல் வெளியிடுவதை பதிவுத் துறை தவிர்த்து வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் என் பது தமிழகம் மட்டுமின்றி புதுச் சேரி மாநிலத்துக்கும் சேர்த்து தீர்ப்பு அளிக்கக்கூடிய ஒரு உயர்ந்த நீதித் துறை அமைப்பு. இங்கு அன்றாடம் நடைபெறும் பணிகளும் ஒரு அர சாங்கத்துக்கு இணையானது. வழக்கு விசாரணை, சக நீதிபதி களின் அன்றாட அலுவல், நீதி நிர் வாகம், அன்றாடப் பட்டியல் வெளி யீடு, பணியிட மாறுதல் என ஒவ் வொரு பணி்க்கும் உயர் நீதிமன்றத் தில் தலைமை நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு தான் பிரதானம். ஆனால் தற்போது தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட தால் தற்போது வரை பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்பட வில்லை.

இதனால் அன்றாட நீதி மன்ற நடைமுறைகளுக்கான உத்த ரவை யாரிடம் பெறுவது என தெரி யாமல் பதிவுத்துறையும் குழப்பத் தில் ஆழ்ந்துள்ளது. இந்த சூழலில் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பிவிட்டாலே அவர் பதவியை இழந்து விடுகிறார். எனவே உச்ச நீதிமன்றம் பரிந் துரைத்துள்ளதுபோல ஏ.கே.மிட் டலை விரைவாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கான தலைமை நீதி பதியாக நியமிக்க வேண்டும் என அகில இந்திய பார் அசோசியேஷன் உள்ளி்ட்ட அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

தஹில் ரமானியின் ராஜினாமா நீதித்துறையில்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற செக்ரட்டரி ஜெனரல் சஞ்சீவ் எஸ்.கல்காங்கர் விடுத்துள்ள அறிக் கையில், ‘‘அண்மையில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதி பதிகளின் இடமாறுதல் தொடர்பாக பல்வேறு தரப்பட்ட செய்திகள் ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காகவே கொலீஜியத்தின் உத்தரவுப்படி இந்த அறிக்கை வெளியிடப்படு கிறது. நீதிபதிகளின் பணியிட மாற்றம் என்பது சிறந்த நீதி நிர்வாகத்தை நிலை நாட்ட எடுக்கப்படும் ஒரு நிர்வாக ரீதி யிலான முடிவு. ஒவ்வொரு பரிந் துரைகளையும் எடுப்பதற்கு முன் பாக கொலீஜியம் ஒன்றுகூடி பல் வேறு அம்சங்களை ஆராய்ந்து ஒரு மி்த்த கருத்துடன்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. நீதி மற்றும் நிர்வாக நலன் கருதி பொது வாக நீதிபதிகளின் இடமாறுதல் தொடர்பாக விளக்கம் அளிப்பதோ அல்லது அதற்கான காரணங்களை வெளிப்படையாக கூறுவதோ ஒரு போதும் கிடையாது. ஆனால் தற் போது இந்த இடமாறுதல் பரிந் துரைகளுக்கான காரணங்களை கொலீஜியம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கும் கொலீஜியம் தயாராக உள்ளது. அதை வெளிப்படையாக தெரிவிப்பதில் கொலீஜியத்துக்கு எந்த தயக்கமும் இல்லை’ என அவர் அதில் தெரிவித்துள்ளார்.


கொலீஜியம்நீதிபதிகள் இடமாற்றம்உச்ச நீதிமன்ற செக்ரட்டரி ஜெனரல்உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள்வி.கே.தஹில் ரமானிதலைமை நீதிபதி பதவி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author