செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 18:01 pm

Updated : : 12 Sep 2019 18:03 pm

 

ஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி: திருச்சியில் செப்.15-ம் தேதி நடக்கிறது

upsc-dnbsc-guidance-running-on-15th-september-in-trichy

திருச்சி,

‘இந்து தமிழ் திசை’நாளிதழ் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’எனும் வழிகாட்டு நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி கலையரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று (செப்.15) நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிகம் செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப் போக்கும் வகையில், இந்தத் தேர்வுகளுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி கலையரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஐஏஎஸ், விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற இருக்கிறார்கள். காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு இலவசப் பயிற்சியும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 9773001174 என்ற செல்போன் எண்ணுக்கு, தங்களது பெயரை குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி, பதிவுசெய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியை ஜேஎம் தொலைக்காட்சி, பீ வெல் ஆட்ஸ், ஸ்ரீராத்திக்கா சில்க் ஆகியோர் இணைந்து வழங்குகிறர்கள்.

இலவசப் பதிவுக்கு க்ளிக் செய்க:


இந்து தமிழ் திசைசங்கர் ஐஏஎஸ் அகாடமிஆளப் பிறந்தோம்வழிகாட்டு நிகழ்ச்சியுபிஎஸ்சிடிஎன்பிஎஸ்சிதிருச்சி
Popular Articles

You May Like

More From This Category

More From this Author