ஆர்.பாலசரவணக்குமார்

Published : 12 Sep 2019 17:02 pm

Updated : : 12 Sep 2019 17:29 pm

 

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

highcourt-ordered-central-governmenr-regarding-hydrocarbon-project
கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கியுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெடுவாசல் மற்றும் காரைக்குடி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க 'ஜெம் லேபாரட்ரிஸ்' மற்றும் 'பாரத் பெட்ரோ ரிசோர்ஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு உரிமம் வழங்கியது. இந்த உரிமத்தை ரத்து செய்யக் கோரி 'பூவுலகின் நண்பர்கள்' இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், "அனைத்து வகையான ஹைட்ரோகார்பன்களையும் ஒற்றை உரிமம் மூலம் எடுக்கும் விதமாக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு சட்டத்திற்கு எதிராக உள்ளது. மேலும், பூமிக்கு அடியில் இருக்கும் ஹைட்ரோகார்பனை, சட்டப்படி அனுமதிக்கப்படாத ஹைட்ரோலிக் ஃப்ரக்சன் முறைப்படி எடுக்க இருக்கின்றனர்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று (செப்.12) விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, மனு குறித்து 8 வார காலத்திற்குள் மத்திய அரசு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.


ஹைட்ரோகார்பன் திட்டம்உயர் நீதிமன்றம்மத்திய அரசுபூவுலகின் நண்பர்கள்Hydrocarbon projectHighcourtCentral governmentPoovulagin nanbargal
Popular Articles

You May Like

More From This Category

More From this Author