செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 13:01 pm

Updated : : 12 Sep 2019 13:02 pm

 

தலைமைச் செயலகத்துக்குள் மீண்டும் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

snake-causes-fear-in-secretariat

சென்னை

சென்னை தலைமைச் செயலக அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பாம்பு புகுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் மாடியில் நல்ல பாம்பு புகுந்தது. இதைப் பார்த்த தலைமைச் செயலகப் பணியாளர்கள், அருகே இருந்த போலீஸாரிடம் தெரிவித்தனர். போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பைப் பிடித்தனர்.

முன்னதாக நேற்றும் தலைமைச் செயலகத்தில் 4-வது நுழைவு வாயில் சுவர் ஓரமாக ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது.

தீயணைப்பு வீரர்கள் அந்தப் பாம்பைப் பிடிக்க முயன்றபோது, அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் மற்றும் பழைய ஆவணங்களுக்கு இடையே புகுந்துவிட்டது. சுமார் அரை மணிநேரம் போராடி, பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். 3 அடி நீளமிருந்த அந்தப் பாம்பு, வண்டலூர் பூங்கா வனச்சரகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக தலைமைச் செயலகத்தில் பாம்பு புகுந்து வருவதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தலைமைச் செயலகம்பாம்புபுகுந்ததுமீண்டும்SnakeFearSecretariat
Popular Articles

You May Like

More From This Category

More From this Author