செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 10:24 am

Updated : : 12 Sep 2019 10:24 am

 

இடைத்தேர்தலுக்கு தயாராகும் புதுச்சேரி: கடும் போட்டிக்கு காங்கிரஸ் ஆயத்தம் - எதிரணியில் அதிமுக, பாஜக தீவிரம்

by-election-in-puduchery

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பொறுப் பேற்ற பிறகு நடக்கும் மூன்றாவது இடைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாரா கத் தொடங்கியுள்ளன. காமராஜர் தொகுதி யில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எதிரணி யில் தொகுதியை பெற அதிமுக, பாஜக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. அது போல் புதுச்சேரியிலும் காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளது. காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சபாநாயகர் வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதற்காக அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த தால் காமராஜர் நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்துடன் புதுச்சேரி யில் உள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக் கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணை யம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கும் நாள் நெருங்குவதால் புதுச்சேரியில் இடைத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் வசம் காமராஜர் நகர் தொகுதி தொடர்ந்து இருப்பதால், மீண்டும் இங்கு காங்கிரஸ் போட்டியிடும் என்று பிரதேச காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் உறுதி செய்துள்ளார். யார் போட்டியிடுவார்கள் என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை.

காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, "மாநிலத் தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி, அத்தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வென்று வந்து தற்போது எம்.பி யாக உள்ள வைத்திலிங் கம் ஆகியோர் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க, தங்கள் தரப்பினரை நிறுத்த முயற்சிக்கின்றனர். இதில் மேலிடம் முடிவு எடுக்கும்" என்கின்றனர்.

எதிரணியில் உள்ள என்.ஆர்.காங்கி ரஸ், அதிமுக, பாஜகவினரிடையே ஒரு மித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை.

பிரதான எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸ் தேர்தல் தேதி அறிவித்த பின்னரே முடிவு எடுக்கும் என்று தெரிவிக் கின்றனர். "கட்சித்தலைவர் ரங்கசாமியின் முடிவே இறுதியானது. தேர்தல் மனுதாக் கல் செய்ய இறுதிநாள் வரை ஏதும் கூற இயலாது" என்று கட்சி தரப்பில் குறிப்பிடு கின்றனர். அதிமுக இதே தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு, 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி யைத் தழுவியது. காமராஜர் தொகுதி யில் அதிமுக போட்டியிட கட்சித் தலை மையை வலியுறுத்த உள்ளதாக அக்கட்சி யின் சட்டப்பேரவைக் குழுத்தலைவர் அன்பழகன் தெரிவிக்கிறார்.

அதேபோல் பாஜகவும் இத்தொகுதியில் போட்டியிட விரும்புகிறது. இதுதொடர்பாக பிரதேச தலைவர் சாமிநாதனிடம் கேட்ட தற்கு, "ஒருங்கிணைந்த தொகுதியாக இருந்த போது, இந்த தொகுதி ரெட்டியார் பாளையம் ஆக இருந்தது. அதில் பாஜக விலிருந்து கிருஷ்ணமூர்த்தி வென்று எம்எல்ஏவானார். அதனால் காமராஜர் நகர் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வலியுறுத்துவோம்" என்று குறிப்பிட்டார்.

மூன்றாவது இடைத்தேர்தல்

கடந்த மூன்றரை ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இது மூன்றாவது இடைத் தேர்தல். ஏற்கெனவே முதல்வர் நாராயண சாமிக்காக நெல்லித்தோப்பு தொகுதி யில் ஒரு இடைத்தேர்தல் நடந்தது. சொத்து குவிப்பு வழக்கால், என்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் பதவியை இழந்ததால் அத்தொகுதி காலியானது. இதனால் கடந்த இரு ஆண்டுகளில் இரு இடைத் தேர்தல்கள் நடந்துள்ளன. தற்போது மூன்றாவதாக சபாநாயகர் வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததால் காமராஜர் நகர் தொகுதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

29 வாக்குச்சாவடிகளைக் கொண் டுள்ள காமராஜ் நகர் தொகுதியில் 30 ஆயிரத்து 659 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்பின் அடிப்ப டையில் ரெட்டியார்பாளையம் தொகுதி யிலிருந்து காமராஜ் நகர் பிரிக்கப் பட்டது. பிரிக்கப்பட்ட பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தலுக்கு தயாராகும் புதுச்சேரி
Popular Articles

You May Like

More From This Category

More From this Author