

திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகரில் தரமற்ற சாலைகளால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவது குறித்து ‘இந்து தமிழ்’ உங்கள் குரல் பகுதி யில் வாசகர்கள் பலர் கருத்து தெரி வித்து வருகிறார்கள்.
பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த வாசகர் ஆண்ட்ரூ, சாந்தி நகரில் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார் கள். இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந் தார்.
திருநெல்வேலி மாநகராட்சி யின் முக்கிய இடமான பாளையங் கோட்டை சாந்தி நகரில் நூற்றுக் கணக்கான குடியிருப்புகள் உள் ளன. இங்குள்ள சாலைகள் தரமற்ற வகையில் அமைக்கப்பட் டுள்ளன. இதனால் சாலைகள் அமைக்கப்பட்ட சில மாதங் களிலேயே சேதமடைந்துவிட்டன.
சமாதானபுரம் அருகில் மிலிட்டரி லைன் பகுதியில் அருள்மணி தெருவில் உள்ள சாலை மிகவும் தரம் குறைந்து காணப்படுகிறது. இருசக்கர வாகனத்தின் கனத்தை கூட தாங்க முடியாத அளவுக்கு சாலையின் தரம் மோசமாக காணப்படுவதாக வாகன ஓட்டி கள் குற்றம்சாட்டுகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்து களில் சிக்காமல் இருக்க கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசுத்துறைகளும், காவல்துறையும் விழிப்புணர்வு நிக ழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஹெல்மெட் அணியா தவர்களுக்கு கடு மையான அபராதமும் விதிக்கப்பட்டு வருகி றது. ஆனால் விபத் துகள் நேரிடுவதற்கு தரமற்ற சாலைகளும் முக்கிய காரணம் என்பதை அரசுத்துறை களும், காவல் துறையும் உணர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கை. தரமான சாலைகளை அமைப்பதை மாவட்ட, மாநகராட்சி, நெடுஞ் சாலைத்துறைகள் உறுதி செய்யாத வரையில் விபத்துகள் நேரிடுவதை தடுக்க முடியாது.