செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 10:15 am

Updated : : 12 Sep 2019 10:15 am

 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஜெர்ரி ரக தக்காளியை 2500 ஹெக்டேரில் பயிரிட விழிப்புணர்வு: தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் தகவல்

jerry-tomatoes
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் புதிய ரக ஜெர்ரி தக்காளி.

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஜெர்ரி ரக தக்காளியை 2500 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக் கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் தக்காளி சாகு படியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் நேரடியாக, ராயக்கோட்டை தக்காளி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர்.

விவசாயிகளிடமிருந்து வியா பாரிகள் கொள்முதல் செய்து, தமிழகத்தில் சென்னை கோவை, சேலம், திருச்சி ஆகிய ஊர்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங் களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக் கின்றனர். இந்நிலையில், புதிய ரக தக்காளியான ஜெர்ரி தக் காளி பழங்கள் சாகுபடி மேற் கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடையே தோட்டக் கலைத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை பகுதியில் நல்ல மண் வளம், சீதோஷ்ண நிலை உள்ளதால் காய்கறிகள் அதிகளவில் விளைவிக் கப்படுகிறது.

தற்போது, இஸ்ரேல் நாட்டில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் ஜெர்ரி தக்காளி பயிரிடுவதில், விவசா யிகள் ஆர்வம் காட்டி வருகின் றனர். இந்த வகை தக்காளி நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கை யாளர்களுக்கு சால்ட்டில் சேர்த்து வழங்கப்படுகிறது.

உள்ளூர் காய்கறி சந்தையில் ஜெர்ரி ரக தக்காளி ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனையாகிறது. இந்த ரக தக்காளிகளை விவசாயி களிடம் கொள்முதல் செய்யும் வியா பாரிகள், அதனை விற்பனைக்காக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அதிக லாபம் தரும் ஜெர்ரி ரக தக்காளி சாகுபடி குறித்து பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரிவதில்லை. தக்காளி சாகுபடியில் இழப்புகளை சந்தித்து வரும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஜெர்ரி தக்காளி சந்தையிடுதல், லாபம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் (பொ) கண்ணன் கூறும்போது, ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி சாகுபடியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் வகையில் 2500 ஹெக் டேர் பரப்பளவில் நவீன ரக ஜெர்ரி தக்காளி பயிரிட விவசாயி களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக அந்தந்த பகுதியைச் சேர்ந்த உதவி தோட்டக் கலைத்துறை அலுவலர் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

தற்போது, 500 ஏக்கர் பரப்பளவில் ஜெர்ரி தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இந்த ரக தக்காளி பெரு நகரங்களில் மட்டுமே பிரபலமாகி உள்ளது. இனிவரும் காலங்களில் ஜெர்ரி தக்காளி பயிரிடுவது அதிகரிக்கும். சாஸ், உணவு தயாரிப்புகளுக்கு ஜெர்ரி தக்காளிகள் உகந்தது,’’ என்றார்.

Jerry tomatoesஜெர்ரி ரக தக்காளிதோட்டக்கலைத்துறை இணை இயக்குநர்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author