Published : 12 Sep 2019 10:09 AM
Last Updated : 12 Sep 2019 10:09 AM

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சிங்கப்பூர் பெண்ணுக்கு தமிழ் கலாச்சார திருமணம்

சென்னிமலையில் சிங்கப்பூர் பெண்ணுக்கு தமிழ் கலாச்சார முறைப்படி நேற்று திருமணம் நடந்தது.

ஈரோடு 

சென்னிமலையைச் சேர்ந்த மணமகனுக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த மணமகளுக்கும் சென்னி மலையில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் சென்னி மலை அடுத்துள்ள பசுவப்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார். சிங்கப்பூரில் காற்றாலை மின்சார உற்பத்தி யில் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ராசாம்பாளையத்தினை பூர்வீக மாகக் கொண்ட, கடந்த மூன்று தலைமுறைக்கு முன்னர் சிங்கப் பூர் சென்று குடியேறி வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த தனலட்சுமியுடன் மோகன் குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இரு வீட்டாரின் சம்மதத்து டன், தமிழ் கலாச்சார முறைப் படி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்காக சிங்கப்பூரில் இருந்து மணமகள் குடும்பத்தினர் ஒரு வாரத்துக்கு முன்னர் கோவை வந்தனர். சென்னிமலை - காங்கேயம் சாலையில், உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது.

மணமகன் பட்டு வேட்டி- சட்டையிலும், மணமகள் பட்டு புடவை என பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர். மணமகனுக்கு தாய் மாமன் துணை இருக்க, மணமகளுக்கு நங்கைகள் துணை இருக்க, சிவாச்சாரியர் மந்திரம் ஓத தாலி கட்டி திருமணம் நடந்தது. திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

திருமணம் குறித்து மணமகள் தனலட்சுமி கூறும்போது, ‘நான் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந் தேன். தமிழ் கலாச்சாரத்தினை படித் துள்ளேன். ஆனால், நான் இது வரை தமிழகம் வந்தது இல்லை. இங்குள்ள மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகுமுறை, உபசரிப்பு போன்றவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x