

கோவை
தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி எதுவுமில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இங்கி லாந்து, அமெரிக்கா, துபாய் நாடு களில் என்னை வரவேற்ற தமிழர் களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியில் தொழில் முதலீடு வெறும் ரூ.26 ஆயிரம் கோடிதான். ஆனால், அதிமுக ஆட்சி ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. ரூ.53 ஆயிரம் கோடிக்கு தொழில் தொடங்கப் பட்டுள்ளது.
எப்போதும் அரசை குறை கூறுவதையே ஸ்டாலின் வாடிக் கையாக கொண்டுள்ளார். தமிழக அரசின் செயல்பாடுகள் அவருக்கு தெரியவில்லை. அவர் குறைகூறாமல் இருந்தாலே, அது எங்களுக்கு பாராட்டுதான். தமிழக முதல்வர் மட்டுமல்ல, அனைத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்களும், அந்தந்த மாநில மேம்பாட்டுக்காக வெளி நாடு செல்கின்றனர். ஆனால், தமிழக முதல்வர் செல்வது மட்டும் எதிர்க்கட்சித் தலைவ ரால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை.
சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்குமாறு கூறினார் ஸ்டாலின். நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், சட்டையை கிழித்துக் கொண்டு சாலையில் அமர்ந்தார். அதேபோலத்தான் அவரது எல்லா செயல்பாடுகளுமே அமைந்துள் ளன.
ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்
வெளிநாடுகளில் இருப்பதைப் போல, தமிழகத்திலும் விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த உள் ளோம். தமிழகத்தைப் பொறுத்த வரை எவ்வித பொருளாதார நெருக்கடியும் கிடையாது. அப்படி இருந் தால், வெளிநாட்டவர் எப்படி தமிழகத்தில் முதலீடு செய்வார் கள்? தொழில் தொடங்க தமிழகம் உரிய மாநிலம் என்பதால்தான், நிறைய முதலீடுகள் வந்துள்ளன. இந்த வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாததால்தான், ஸ்டாலின் அவதூறு பேசி வரு கிறார்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.
முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ.வை முதல்வர் சந்தித்து நலம் விசாரித்தார்.