செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 07:39 am

Updated : : 12 Sep 2019 07:40 am

 

மின்வாரியத்தில் நிதிச்சுமை இருந்தாலும் மின்கட்டண உயர்வு தற்போதைக்கு இல்லை- அமைச்சர் தங்கமணி தகவல்

no-electricity-tax-hike-for-now

சென்னை

மின் வாரியத்துக்கு நிதிச்சுமை இருந்தபோதிலும், மின்கட்ட ணத்தை உயர்த்தும் எண்ணம் தற் போதைக்கு இல்லை என்று அமைச் சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கான கட்டணம் மற்றும் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ள தாகவும், அதற்கான பரிந்துரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளிக்கப்பட் டுள்ளதாகவும் தகவல்கள் வெளி யான நிலையில், அவற்றை அமைச் சர் தங்கமணி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்ப தாவது:

மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்வாரியம் எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை. அதேநேரம், புதிய மின் இணைப் புக்கான கட்டணத்தை உயர்த்து வது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடி வெடுத்துள்ளது. அந்த திட்டமும் தற்போதைக்கு அமல்படுத்தப்பட வில்லை. மின்வாரியத்துக்கு நிதிச் சுமை உயர்ந்து கொண்டே போகிறது. இருப்பினும் அதை பொதுமக்கள் தலையில் வைக்க நாங்கள் விரும்பவில்லை.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் கட்டமைப்பை சீரமைப்பதற்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி செல வழிக்கப்பட்டுள்ளது. சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்த ரூ.1,200 கோடி செலவழிக் கப்பட்டுள்ளது. இதுதவிர, நிலக்கரி கொள்முதலுக்கான செலவும், அதைக் கொண்டு வருவதற்கான செலவும் அதிகரித்துள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்துக்கான தொகையும் ஒரு யூனிட்டுக்கு 44 காசு உயர்ந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மின்கட்டண உயர்வுஅமைச்சர் தங்கமணிமின்வாரியத்தில் நிதிச்சுமைTNEBபுதிய மின் இணைப்புதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author