Published : 12 Sep 2019 07:26 AM
Last Updated : 12 Sep 2019 07:26 AM

தேசிய திறனாய்வுத் தேர்வு தேர்ச்சி விவரம் பதிவேற்றும் பணி சுணக்கம்: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பது தாமதமாகும்

சென்னை

தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதி வேற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டுள் ளது. இதனால், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பது காலதாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வரு கின்றன. அந்த வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇ ஆர்டி) சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் கல்வி உதவித் தொகை திட்டம் (என்எம்எம்எஸ்) கடந்த 2007-ம் ஆண்டு அமல் படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களில் நன்கு படிக்கும் மாணவர் களை அடையாளம் கண்டு அவர் களுக்கு மாதம்தோறும் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதன்மூலம் 8-ம் வகுப்புக்கு பின் ஏற்படும் இடைநிற்றலை குறைத்து ஏழை மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியும்.

இந்த திட்டத்தின்கீழ் அரசு தேர்வுத் துறை நடத்தும் என்எம் எம்எஸ் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவர்கள் பிளஸ் 2 முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

என்எம்எம்எஸ் திட்டத்தில் தேர்ச்சி பெற்று நடப்பு கல்வி ஆண் டில் (2019-20 ) 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விவரங்களை இணை யதளத்தில் பதிவேற்ற வேண்டும். அதேபோல், முந்தைய ஆண்டு களில் தேர்ச்சி பெற்ற மாணவர் களின் விவரங்களையும் புதுப் பிக்க வேண்டும். அதன் அடிப் படையில்தான் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கும்.

நடப்பு ஆண்டில் கல்வி உதவித் தொகை தகுதி பெற்ற 6,695 மாண வர்களில் வெறும் 500 பேரின் விவ ரங்களே பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. மேலும், புதுப்பித்தல் பணிகளும் குறைந்த அளவில் தான் நடைபெற்றுள்ளன. இதனால், தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து என்எம்எம்எஸ் தேர்ச்சி பெற்றவர்கள் விவரங்களை விரை வாக பதிவேற்றம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணி கள் அனைத்தும் முடிவடைந்த பின்னரே மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x