Published : 12 Sep 2019 07:22 AM
Last Updated : 12 Sep 2019 07:22 AM

சேலம் தலைவாசலில் 1000 ஏக்கரில் சர்வதேச கால்நடை பூங்கா அமைக்க ஒரு மாதத்தில் திட்ட அறிக்கை: தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு

எஸ்.விஜயகுமார்

சேலம்

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார். இம்மையத்தில் ஆடு, மாடு, கோழி, நாய், மீன் என பல வகை விலங்குகள் குறித்து ஆராய்ச்சி, அபிவிருத்தி, நோய் தடுப்பு உள்ளிட்டவை மேற் கொள்ளப்படும், மேலும், கால்நடை அறிவியல் கல்லூரி அமைக் கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்நிய முத லீடுகளை ஈர்க்கவும், கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கான நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும் வெளிநாடு களில் சுற்றுப்பயணம் மேற் கொண்ட முதல்வர் பழனிசாமி, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடு களில் உள்ள நவீன கால்நடை ஆராய்ச்சி மையங்களை பார்வையிட்டு நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார்.

தொடர்ந்து, தலைவாசலில் கால்நடைப் பூங்கா அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த அதி காரிகளுக்கு முதல்வர் உத்தர விட்டார். இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் சண்முகம், நிதித்துறை செயலர் கிருஷ் ணன், கால்நடை பராமரிப்புத் துறைச் செயலர் கோபால், ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ், விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியன் மற்றும் பொதுப் பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்துறை உயரதிகாரிகளும், எம்எல்ஏக் களும் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா அமை யுள்ள வி.கூட்டுரோடு ஆட்டுப் பண்ணை இடத்தை நேற்று ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் தலைமை செயலர் சண்முகம் கூறியதாவது: சர்வதேச கால் நடை ஆராய்ச்சி மையம் அமைக் கப்படும் முன்னர் அதுகுறித்த மாதிரி பண்ணை அமைக்கப்பட வேண்டிய இடம், கால்நடை பண்ணையில் உற்பத்தி செய் யப்படும் பால் பொருட்கள், இறைச்சி பதப்படுத்தும் பிரிவு, தரக்கட்டுப்பாடு பிரிவு ஆகி யவை அமைக்கும் இடம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி யாக இடம் ஒதுக்கீடு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டப் பணிகள் குறித்து திட்டமிடும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “ஆயிரம் ஏக்கரில் அமையவுள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கான திட் டத்தை உருவாக்கும் ஏஜென்சி யாக, நபார்டு நிறுவனத் தின் ‘NABCONS’ நியமிக்கப்பட் டுள்ளது. அந்நிறுவனம் முதல் கட்டமாக, நிலத்தை அளவீடு செய்வது குறித்து, ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

ஆராய்ச்சி மையத்துக்குத் தேவையான நீர் ஆதாரம் குறித்தும், கால்நடை மருத்துவக் கல்லூரி அமையும் இடம் என ஒருங்கிணைந்த ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிப்படை திட்ட மிடல் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

மேலும், விரிவான திட்ட அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x