Published : 12 Sep 2019 07:04 AM
Last Updated : 12 Sep 2019 07:04 AM

குறுங்காடுகளை உருவாக்கும் புதுச்சேரி இளைஞர்கள்

அ. முன்னடியான்

புதுச்சேரி

இயற்கையான சூழலில் உருவான நீண்ட நெடிய பெருங்காடுகளை நம்மால் செயற்கையாக உருவாக்க முடியாது. ஆனால், ஆங்காங்கே சிறு மற்றும் குறுங் காடுகளை உருவாக்கி அதை ஈடு கட்ட முடியும் என்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.

அதன்படி புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ‘அகிரா மியவாக்கி குறுங்காடுகள் திட்டம்’ என்ற பெயரில் குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

‘அன்னபிரதோக்ஷனா சேவை அறக்கட்டளை'யைச் சேர்ந்த அந்த இளைஞர்கள், 'சகோதரன்' என்ற அமைப்புடன் இணைந்து இப் பணியைத் தொடங்கியிருக்கின் றனர். முதற்கட்டமாக இந்த குறுங் காடுகளுக்காக, புதுச்சேரி நோணங் குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 600 சதுர அடி நிலப்பரப்பில் அடர் நடவு முறையில் 150 மரக் கன்றுகளை நடவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அன்னபிரதோ க்ஷனா சேவை அறக்கட்டளை நிறுவனர் பிரவீனிடம் பேசிய போது, ‘‘இந்த அகிரா மியவாக்கி குறுங்காடு திட்டம், குறைவான காலத்தில் பெரும் பயனளிப்ப தாகும். 2 வருடங்களில் வளர்ந்து இம்மரங்கள் பயனளிக்கும். குறிப் பிட்ட இடைவெளியோடு, அதே நேரம் சற்று நெருக்கமாக மரக் கன்றுகளை நடுவதன் மூலம் 8 மாதங்களில் 14 அடி வரை வளர்ந்துவிடும்.

சூரிய ஒளியைப் பெற மரங் களுக்குள் நிலவும் போட்டியே, இந்த மரக்கன்றுகளை விரைவாக வளரச் செய்கிறது. ஒவ்வொரு மரங்களும் தன்னுடைய சத்துகளை சமமாக பகிர்ந்தளிப்பதன் மூலம் அனைத்து மரங்களும், சரி சமமாக வேகமாக வளர்கின்றன. அகிரா மியவாக்கி என்னும் ஜப்பானிய தாவரவியல் வல்லுநர் கண்டுபிடித்த இந்த முறை குறுகிய காலத்தில் மரங்கள் அடர்த்தியாக வளர்வதற் கும், குறைவான இடத்தில் நிறைய பயன் பெறவும் உதவுகிறது.

வெற்றிடங்களில் ஆங்காங்கே குறுங்காடுகளை வளர்ப்பதன் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். மண் அரிப்பைத் தடுக் கலாம். மழை உருவாக்கத்துக்கு உதவும். காற்றின் மாசு அளவை குறைக்கவும் இது உதவுகிறது.

புதுச்சேரியில் தானே புயலுக்கு பிறகு மரங்கள் குறைந்துள்ளன. சூழல் மாசுபட்டு நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது. இதை மாற்ற மேற்கொள்ளும் பல முயற்சிகளில் குறுங்காடுகள் வளர்ப்பு முயற்சியும் முக்கியமானது. வேம்பு, கொன்றை, நீர் மருது, மருது, அத்தி, குமிஷி உள்ளிட்ட 50 வகையான மரக் கன்றுகளை இந்த குறுங்காடு வளர்ப்புக்காக நடவு செய்கிறோம். அழிவின் விளிம்பில் இருக்கும் மரக்கன்றுகளை கண்டுபிடித்து அதை வாங்கி வந்து நடவு செய்கிறோம்.

முதல்முறையாக நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த குறுங்காடு உருவாக்கும் முயற்சியை செய்துள்ளோம். அதற்கு அப்பள்ளியின் ஆசிரியர் கள், மாணவர்கள் உறுதுணையாக இருந்தனர். இத்திட்டத்தை புதுச் சேரி முழுவதும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x