Published : 12 Sep 2019 07:00 AM
Last Updated : 12 Sep 2019 07:00 AM

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய தொழில்நுட்பம் மூலமாக சென்னையின் 210 நீர்நிலைகளில் நீர்மட்டத்தை மேம்படுத்த திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக வில்லிவாக்கம் ஏரியில் அறிமுகம்

டி.செல்வகுமார்

சென்னை

குறைந்த செலவில் கழிவுநீரை சுத்திகரிக்கும் புதிய தொழில் நுட்பத்தை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் கண்டு பிடித்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக சென்னை வில்லி வாக்கம் ஏரியில் இந்த தொழில் நுட்பத்தை செயல்படுத்தி, நிலத் தடி நீர்மட்டத்தை உயர்த்த திட்ட மிடப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள 210 நீர்நிலைகளிலும் படிப்படியாக இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தும் திட்டங் களுக்கு மத்திய ஜல்சக்தி துறை முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தண்ணீர் சுத்திகரிப்புக்கான புதிய தொழில்நுட்பத்தை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ஏரியில் இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, ஏரியை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, பெருநகர சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி ராஜ் செருபால், மாநகராட்சி மழைநீர் வடிகால் மற்றும் சிறப்பு திட்டங் கள் செயற்பொறியாளர் பி.ஆர்.சரவணமூர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் ரிப் பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினர்.

இதுகுறித்து மும்பை அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறியதாவது:

தற்போதைய கழிவுநீர் சுத்தி கரிப்பு முறைகளை செயல்படுத்த அதிக நிலப்பரப்பு தேவை. செல வும் அதிகம் ஆகும். ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படு வதால், அருகே உள்ள வீடுகள், குடியிருப்புகளில் துர்நாற்றம் அடிக்கும். இதனால் கழிவுநீர் சுத்தி கரிக்கப்படாமல் வாய்க்கால்கள், கால்வாய்கள் வழியாக கடலில் கலக்கப்படுகிறது.

இந்நிலையில், ரசாயனம், துர் நாற்றம் இல்லாமல், மின்சார பயன்பாடு, குறைவான நிலப்பரப்பு மற்றும் குறைந்த செலவில் கழிவு நீரை சுத்திகரிக்க மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் ‘ஹைப்ரிட் கிரானுலர்’ (Hybrid Granular) என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. அதற்கு காப்புரிமை பெற கடந்த ஏப்ரலில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கழிவுநீர் சுத்தி கரிப்பு பணிக்காக மத்திய அரசுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இதுபற்றி தக வல் அறிந்த சென்னை மாநகராட்சி, எங்கள் மையத்தை அணுகியது.

தூர்வாரும் பணி

மாநகராட்சியின் திட்டப்படி, முன்னோடி களமாக வில்லிவாக்கம் ஏரி எடுத்துக்கொள்ளப்படுகிறது. இங்கு தூர்வாரும் பணி தற் போது நடக்கிறது. வரும் பருவ மழையின்போது இங்கு தண்ணீர் நிரப்பப்படும். அப்போது, ஏரியில் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘ரீசார்ஜ் வெல்’ மூலமாக பூமிக் குள் தண்ணீர் சென்று நிலத்தடி நீர் மேம்படும்.

ஏரி நீர் ஒரே நேரத்தில் ஆவியாகவும் மாறும், நிலத்துக்கு உள்ளேயும் செல்லும். அதனால், கோடைகாலத்தில் ஏரியில் நீர் விரைவில் வற்றிவிடும். ஆனால், அவ்வாறு வற்றாமல் இருப்பதற் காக, எங்களது புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, ஏரியில் விடப்படும். இதனால், ஏரியில் நீர்மட்டம் ஆண்டு முழுவதும் சீராக பராமரிக்கப்படும்.

தற்போதைய ஆய்வின்படி, இந்த ஏரியில் ஆவியாதல் மற்றும் நிலத்துக்குள் செல்லும் நீரின் அளவு தினமும் 5 மில்லியன் லிட்டராக இருக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தின்படி, இந்த அளவுக்கு கழிவுநீரை சுத்திகரித்து ஏரிக்குள் செலுத்தினால், ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து பராமரிக்கப்படும். ஏரி யில் எப்போதும் தண்ணீர் இருப் பதுடன், சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டமும் மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வில்லிவாக்கம் ஏரியை தொடர்ந்து, இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் கழிவுநீரை சுத்திகரித்து சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் என 210 நீர்நிலைகளில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை யில் ஒருமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் தினமும் சுமார் 850 மில்லியன் லிட்டர் அளவுக்கு கழிவுநீராக வெளியேற்றப்படு கிறது. இது கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது. இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்தை பயன் படுத்தி கழிவுநீர் சுத்திகரிக்கப் படுவதால், தண்ணீர் வீணாவது தடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x