Published : 22 Jul 2015 08:13 AM
Last Updated : 22 Jul 2015 08:13 AM

தமிழகத்தில் வேலைநிறுத்தம், கதவடைப்பு இல்லை: டெல்லி மாநாட்டில் அமைச்சர் பி.மோகன் தகவல்

தமிழகத்தில் வேலைநிறுத்தம் மற்றும் கதவடைப்பு தற்போது இல்லை என தொழிலாளர் மாநாட் டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பி.மோகன் தெரிவித்தார்.

டெல்லி விக்யான் பவனில் 46-வது இந்திய தொழிலாளர் மாநாடு நடக்கிறது. மாநாட்டின் 2-ம் நாள் கலந்தாய்வு கூட்டத்தில் தமிழகம் சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பி.மோகன் பங்கேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் மோகன் பேசியதாவது:

தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் பரஸ்பர ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் நன்மதிப்பின் மூலமே முன்னேற முடியும். உரிய நேரத்தில் சமரச அலுவலர்கள் தலையீட்டால், தமிழகத்தில் வேலைநிறுத்தம், கத வடைப்பு ஆகியவை தற்போது இல்லை. அரசின் முற்போக்கு கொள்கை, தொழில் வளர்ச்சிக் கான சாதகமான சூழல் போன்றவற் றால் முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதிக முதலீடுகளால் வேலை வாய்ப்புகளும் அதிகமாக உருவாகியுள்ளன.

தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 62 ஐடிஐ-களுடன் கூடுதலாக 15 ஐடிஐ-கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இதுவரை 21 துறைகளில் 3.21 லட்சம் பேருக்கு பயிற்சி அளித் துள்ளது. நடப்பாண்டில் இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகங் கள் மூலம் 71,531 பேர் அரசுத் துறை யிலும், வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 83,384 பேர் மற்றும் வளாக தேர்வு மூலம் 51,780 இளைஞர்கள் தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் 8,660 பேர் அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழகம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறது. தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ், 259 சிறப்பு பள்ளிகளில் 10,832 குழந்தைகள் படிக்கின்றனர். தமிழகத்தில் தொழில் வணிகம் சுமூகமாக நடக்க முழுமையான ஆய்வுத்திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. அதே நேரம் புகார்கள் அடிப்படையில் ஆய்வு மற்றும் தரம் வாய்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.

தொழில் வளர்ச்சியுடன் தொழி லாளர்கள் பாதுகாப்பு மற்றும் நலனை சமமாக பாதுகாத்திட தொழிலாளர் சட்ட திருத்தங்கள் அவசியமானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x