தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும், அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்.11) வெளியிட்ட தகவல்:

''வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ.மீ. மழையும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது''.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in