செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 16:06 pm

Updated : : 11 Sep 2019 16:06 pm

 

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்: நாளை முதல் முன்பதிவு

train-tickets-for-pongal-festival-booking-for-the-first-10-days

சென்னை,

வரும் 2020-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் ரயில் டிக்கெட்டுகளை நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வெளியூர் செல்பவர்கள் ரயில் டிக்கெட்டுகளை நாளை முதல் முன்பதிவு செய்யலாம். பண்டிகை நாட்களுக்கு முன் கூட்டியே முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. ஜன.10-ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக ஜனவரி 19-ம் தேதி வரை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன,

தினமும் காலை 8 மணிமுதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்தினர்களுடன் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்பவர்கள் நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளவும்.

தேதிகள் வாரியாக எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தேதிக்கு முன்பதிவு என்பது குறித்த விவரம்:


ஜனவரி 10-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 12-ம் தேதி

ஜனவரி 11-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 13-ம் தேதி

ஜனவரி 12-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 14-ம் தேதி

ஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 15-ம் தேதி

ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 16-ம் தேதி

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் ஊர் திரும்புவோர்களுக்கு முன்பதிவு செய்வதற்கான தேதி:

ஜனவரி 19-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 21-ம் தேதி

ஜனவரி 20-ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 22-ம் தேதி

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சுகமான சுமையில்லாத பயணத்திற்குத் தேதி வாரியாக வெளியான விவரத்தின்படி முன்பதிவு செய்து பிரச்சினையின்றி வெளியூர் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடவும்.

Train ticketsPongal FestivalBooking startNext 10 daysபொங்கல் பண்டிகைரயில் டிக்கெட்முன்பதிவு10 நாட்கள் நடக்கிறது
Popular Articles

You May Like

More From This Category

More From this Author