

சிவகங்கை,
சிவகங்கை அருகே உள்ள பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்பசாமி (80) என்வர் தான் ஜீவசமாதி அடையப்போதாக போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனைப் பார்த்து ஏராளமானோ அந்த சாமியாரைப் பார்க்க குவிந்து வருகின்றனர்.
இது தொடர்பாக இருளப்ப சாமியார், "பல ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் பாதிக்கப்பபட்டேன் அப்போது என்னை பரிசோதித்த டாக்டர்கள் நான் உயிர் பிழைக்க வாய்ப்பேயில்லை என்று கூறிவிட்டனர்.
அன்று இரவே எனது கனவில் சிவபெருமான் வந்து என்னைப் பிழைக்க வைத்தார் அன்று முதல் கால்நடையாகவே சிவாலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு வந்தேன். தற்போது நான் சிவனடியை அடையும் நேரம் வந்துவிட்டது.
வருகின்ற செப்டம்பர் 13-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஜீவசமாதி அடையப் போகிறேன். எனது பக்தர்கள் என்னை பாசாங்கரை கிராமத்தில் ஜீவசமாதி செய்வார்கள். அதன் பிறகு இந்த கிராமம் செழிப்பாக மாறும்" என்று கூறினார்.
ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்த சாமியாரைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.