Published : 11 Sep 2019 01:58 PM
Last Updated : 11 Sep 2019 01:58 PM

அண்ணா சாலை இருவழிப் பாதையாக மாற்றம்: பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்

சென்னை,

அண்ணா சாலை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டதால் அண்ணா சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாதை, பேருந்து எண், எண்ணிக்கை, எத்தனை நடை என்பது குறித்து போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலை இருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து இயக்கம் குறித்து மேலாண் இயக்குநர் கோ.கணேசன் அளித்த தகவல்:

சென்னை அண்ணா சாலையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 52 வழித்தடங்களில், நாளொன்றுக்கு 256 பேருந்துகள் வாயிலாக 2,963 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்தன. மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு அண்ணா சாலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

அண்ணா சாலை வழியாக இயக்கப்பட்டு வந்த மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஆகிய சாலைகள் வழியாக இயக்கப்பட்டன.

தற்பொழுது அண்ணா சாலையில் இருவழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பொது மக்கள் வசதிக்காக, இம்மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் வாயிலாக அண்ணாசாலையில் இரு வழியாக இயக்கப்பட உள்ள பேருந்து விவரம்.

அண்ணாசாலை வழியாக செல்லும் தடப் பேருந்துகள் விவரம் (இருபுறமும்)
முறையே பேருந்து எண், எந்தெந்த ரூட், மொத்த பேருந்துகள் எண்ணிக்கை, எத்தனை ட்ரிப் என தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x