Published : 11 Sep 2019 12:36 PM
Last Updated : 11 Sep 2019 12:36 PM

வெளிநாடு பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் பழனிசாமி: ரூ.8,830 கோடி முதலீட்டுக்கு 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; 37,300 பேருக்கு வேலைவாய்ப்பு- விரைவில் இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் தகவல்

சென்னை

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் சுற்றுப் பயணம் மூலம் ரூ.8,830 கோடிக் கான முதலீடுகளுக்கு 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள தாகவும் இதன்மூலம் 37,300 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி நேற்று அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில், மக்களவை முன்னாள் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்டவர்கள் அவரை வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இங்கிலாந்து பயணத்தின்போது மருத் துவர்கள், பணியாளர்கள் பணித்திறனை மேம்படுத்தும் வகையிலும் கிங்ஸ் மருத்துவ மனை கிளையை தமிழகத்தில் தொடங் கவும் டெங்கு, மலேரியா கொசுக்களை ஒழிக்கும் வகையிலும் ‘லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன்’ மற்றும் ‘டிராபிகல் மெடிசின்’ நிறுவனத்துடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் போடப்பட்டன. மேலும், லண்டன் ஆம்புலன்ஸ் சேவை, என்சென் நிறுவனத் தில் சூரியசக்தி மற்றும் காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின் கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறையை அறிந்து கொண்டோம். இங்கிலாந்து எம்.பி.க்களிடம் தமிழகத்தில் அதிகளவு முதலீடு செய்ய அழைப்பு விடுத்தோம்.

அதன்பின் அமெரிக்கா சென்று அங் குள்ள பஃபல்லோ கால்நடை பண்ணை யில், கால்நடை வளர்ப்பு மற்றும் தொழில் நுட்பத்தை கேட்டறிந்தோம். நியூயார்க்கில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து 16 ஒப்பந்தங்கள் மூலம், ரூ.2,780 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதற்காக 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

மேலும், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி யதன் மூலம் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடும் பல்லாயிரக்கணக் கான வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

அதன்பின், முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் நியூயார்க் மற்றும் சான் ஹூசே நகரில் ‘யாதும் ஊரே’ திட் டத்தை தொடங்கி வைத்தேன். சான் ஹூசே வில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத் தில், 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2,300 கோடி முதலீட்டுக்கு கையெழுத் தாகின.

மேலும் சான்பிரான்சிஸ்கோவில் மின் சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தை நேரில் பார்வை யிட்டேன். இந்த நிறுவனத்தை தமிழகத் தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தேன். தொடர்ந்து, சான்பிரான் சிஸ்கோவில் மாசில்லா எரிசக்தி தயாரிக் கும் ‘புளூம் எனர்ஜி’ நிறுவனத்தை பார்வை யிட்டதுடன், லாஸ் ஏஞ்சல்ஸ் அன ஹெய்ம் நகரின் மேயர் சித்துவை சந் தித்து, கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து கேட்டறிந்தோம். இத்திட்டங்களை தமி ழகத்தில் செயல்படுத்த முடிவெடுத்து உள்ளோம்.

துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, ரூ.3,750 கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டுக்கு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து ரூ.8,830 கோடி முதலீட்டுக்கு 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் திடப்பட்டுள்ளன. இதன்மூலம் தமி ழகத்தில் 37,300 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த நாடுகளில் சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அந்த அடிப்படையில் தமிழகத்திலும் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற் கொள்ளும். அந்த வகையில் இந்த பயணம் வெற்றிகரமான பயணமாக அமைந்தது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்கள் கேள்வி களுக்கு முதல்வர் பதில் அளித்தார்.

வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறாரே?

எப்போது முதல்வராக பதவியேற் றேனோ அன்றில் இருந்து இன்று வரை அவர் எதிர்ப்புக் குரல்தான் பதிவு செய் கிறார். அவர் நினைத்தவை நடக்காத எரிச்சல், பொறாமையில் இந்த வார்த்தை களை உதிர்க்கிறார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணம் பிற நாடுகளுக்கும் தொடருமா?

அடுத்து நான் இஸ்ரேல் செல்ல உள் ளேன். நாம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு பயன் படுத்தும் தண்ணீரை, 7 ஏக்கருக்கு பயன் படுத்த முடியும். அந்த தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி கழிவு நீரை மறுசுழற்சி செய்து அவர்கள் விவசாயத் துக்கு பயன்படுத்துகின்றனர். இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் நாடு இஸ்ரேல். அந்த நாட்டுக்கு நாங்கள் செல்ல திட்டமிட் டுள்ளோம். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x