Published : 11 Sep 2019 10:18 AM
Last Updated : 11 Sep 2019 10:18 AM

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக மாமல்லபுரம் கடற்கரையில் சிசிடிவி கேமராக்கள்

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் கடற்கரை பகுதியை கண்காணிக்க, சுவ்தேஷ் தர்ஷன் திட்டத்தில் சுழலும் சிசிடிவி கேமராக் களை அமைக்கும் பணிகளை சுற்றுலாத் துறை தொடங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் உலக அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, சர்வதேச தரத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு சுவ்தேஷ் தர்ஷன் திட்டத்தின்கீழ் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.11.63 கோடி நிதி ஒதுக்கியது. இதைப் பயன்படுத்தி, நகரப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா, நவீன கழிப்பறைகள், நடைபாதைகள், கடற்கரைக்கு செல்ல சாலை வசதி, அலங்கார மின் விளக்குகள், மீட்புப் படகுகள், கடற்கரையில் இருக்கைகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.

மேற்கண்ட பணிகளை மேற் கொள்ள முதற்கட்டமாக ரூ.6.6 கோடி நிதி வழங்கப்பட்டது. இப் பணிகளை பேரூராட்சி மற்றும் சுற்றுலாத் துறை நிர்வாகம் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு ஆகிய பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அத்துறையின் ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், கடற்கரையை 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக சுழலும் சிசிடிவி கேமராக்களை அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சுற்றுலாப் பயணி கள் கூறியதாவது: கடற்கரையில் போலீஸாரின் கண்காணிப்பு குறை வாக உள்ளதால், பெண்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இன் னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும், சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பாது காப்பு குறைவால் வழிப்பறி சம் பவங்களும் அரங்கேறி வருகின் றன. தற்போது, சுழலும் கேமரா அமைக்கப்படுவதால் கடற்கரை யின் பல்வேறு பகுதிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இத னால் அசம்பாவிதங்கள் குறையும் என நம்புகிறோம் என்றனர்.

இதுகுறித்து, சுற்றுலாத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: சுவ்தேஷ் தர்ஷன் திட்டத்தில் கடற்கரையில் முதற்கட்டமாக 25 சுழலும் சிசிவிடி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. கேமரா பொருத்துவதற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சிசிடிவி கேமராக் கள், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x