Published : 11 Sep 2019 08:52 AM
Last Updated : 11 Sep 2019 08:52 AM

உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்; ஈரோட்டில் மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு 

உள்ளாட்சித் தேர்தலை நடத்து வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்தி வருகி றார். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ளாட்சித் தேர்தலை நடத் துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆணையர் பழனிசாமி தலைமை யில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாநகராட்சியில் அமையவுள்ள வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையர் பார்வையிட்டார். மேலும், பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள வாக்குப்பதிவு இயந் திரங்கள், வாக்காளர் விண்ணப்பப் படிவங்கள் சரிபார்க்கும் பணி ஆகியவற்றையும் ஆணையர் ஆய்வு செய்தார்.

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறியதாவது: வார்டு மறுவரையறைக்குப் பின்பான வார்டு வாரியான வாக்காளர் பட்டி யல் தயார் செய்தல், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக் கையை இறுதி செய்து, அவற்றை தயார் படுத்துதல் ஆகிய பணி களே உள்ளாட்சித் தேர்தலுக்கான முக்கியப் பணிகள். மாநிலம் முழுவ தும் நடந்த வார்டு வரையறைப் பணிகளின்படி, பொது, பெண்கள், பட்டியலினத்தவருக்கான வார்டு கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

மொத்த வார்டுகளின் எண்ணிக் கையில் மாறுபாடு இருக்காது. ஆனால், வார்டுகளுக்கான எல் லைப் பகுதிகளிலும், வார்டு எண் களிலும் மாறுதல் இருக்கலாம். இந்த மாறுதலுக்கு ஏற்ப வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணி பெரும்பான்மையாக முடிக்கப் பட்டுள்ளது.

வாக்குச் சாவடியை பொறுத்த வரை ஒரு சாவடிக்கு 1200 முதல் 1400 வாக்காளர்களைக் கொண்ட தாக இருக்க வேண்டும். அதற் கேற்ப வாக்குச் சாவடிகள் பிரிக் கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்த லின்போது, வாக்களித்த வாக்குச் சாவடிகளிலேயே, வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையிலேயே சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் முழுவதும் 2,700 வாக்குச்சாவடிகள் தேவை யாய் உள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி பகுதியில் வசிப்போர் 4 வாக்குகளை செலுத்த வேண்டி இருக்கும் என்பதால், அங்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடக்கவுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமும் தேர்தல் நடத்த முன்பே திட்டமிடப்பட்டது. இதன்படி, ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் பயன்படுத்த 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தேவைப்படுகிறது.

டிச. அல்லது ஜனவரியில் தேர்தல்

எனவே, தேர்தலுக்குத் தேவை யான வாக்குப்பதிவு இயந்திரங் களை இறுதி செய்து, அவற்றின் நிலையை, சோதனைக்கு உட் படுத்த வேண்டியுள்ளது. மாநிலம் முழுக்க உள்ளாட்சித் தேர்தலுக் கான பணிகள் 50 சதவீதத்துக்கும் மேல் முடிந்துள்ளன. டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்தல் நடைபெறலாம் என்ற நிலை உள் ளது. தேர்தல் 2 கட்டமாக பிரித்து நடத்தப்பட வாய்ப்புள்ளதால் அதற் கேற்ப அலுவலர்களைப் பிரித்து பணியாற்றவும் தயார்படுத் தப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x