செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 08:37 am

Updated : : 11 Sep 2019 08:38 am

 

காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

dengue-fever-remedies

சென்னை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு காய்ச்சல் வார்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. இதை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சென்னை அரசு பொது மருத் துவமனையில் அமைக்கப்பட் டுள்ள காய்ச்சல் வார்டுகளில் 71 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட தேவை இல்லை. இங்கு நல்ல அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், செவிலியர் கள் உள்ளனர். மருந்துகளும் தயா ராக உள்ளன. டெங்கு காய்ச் சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. படுக்கை வசதி இருந் தால் டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், கடலூர் ஆகிய மாவட் டங்களில் டெங்குவால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வரு பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்ச லுக்கு கொடுக்கப்பட்ட நிலவேம்பு குடிநீர் மலேசியாவிலும் பயன் படுத்தப்படுகிறது. காய்ச்சல் இருந் தால் உடனடியாக அரசு மருத்து வமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

காய்ச்சல்டெங்குஅரசு பொது மருத்துவமனைடெங்கு காய்ச்சல்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author