Published : 11 Sep 2019 08:32 AM
Last Updated : 11 Sep 2019 08:32 AM

அத்தப்பூ கோலத்தை அலங்கரிக்க வண்டி வண்டியாய் கேரளாவுக்கு சென்ற வண்ண மலர்கள்

எல்.மோகன்

நாகர்கோவில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தை நேற்று களைகட்டியிருந்தது. விடிய விடிய மலர் வியாபாரம் நடந்த நிலையில் தேவைக்கு அதிகமான அளவில் பூக்கள் குவிந்தன. இதனால் விலை யும் குறைந்ததுடன், 200 டன்னுக் கும் மேற்பட்ட மலர்கள் தேக்கம் அடைந்தன.

ஓணம் பண்டிகையில் அத்தப்பூ கோலம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக கேரள வியாபாரிகளால் பூக்கள் அதிக அளவு கொள்முதல் செய்யப்படும். கடந்த 2-ம் தேதி யில் இருந்தே ஓணம் கொண் டாட்டத்துக்கான மலர் வியாபாரம் தொடங்கினாலும், முந்தைய ஆண் டுகளைப் போன்று களைகட்ட வில்லை. கேரளாவில் 2 ஆண்டு களாக இயற்கை சீற்றங்க ளால் ஏற்பட்ட பாதிப்பே இதற்கு காரணம்.

ஆனால், இன்று ஓணம் கொண் டாடப்படும் நிலையில், நேற்று முன்தினம் தோவாளையில் மலர் வியாபாரம் சூடுபிடித்தது. மதுரை, ஓசூர், சத்தியமங்கலம், பெங்க ளூரு, சங்கரன்கோவில், பழவூர் போன்ற பகுதிகளில் இருந்து டன் கணக்கில் மலர்கள் தோவாளைக்கு வந்து இறங்கின. அத்தப்பூ கோலத் துக்கு தேவையான கிரேந்தி, வாடாமல்லி, கோழிக்கொண்டை, ரோஜா, சம்பங்கி, அரளி பூக்கள் 800 டன்னுக்கு மேல் வந்தன.

பூக்கள் கொள்முதலுக்காக கேரள வியாபாரிகளும், பொது மக்களும் தோவாளையில் குவிந் தனர். மலர் சந்தைக்கு செல்லும் வழியில் உள்ள சாலையோரங்களி லும் பூக்களை குவித்து வைத்து விடிய விடிய வியாபாரம் நடந் தது. மதுரை, சத்தியமங்கலம், பெங் களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்களை விலை பேசி, வாகனங்களில் இருந்து கீழே இறக்காமல் சில வியாபாரிகள் அப் படியே நேரடியாக கேரளாவுக்கு கொண்டு சென்றனர்.

லாபமா, நஷ்டமா?

இதுகுறித்து தோவாளை மலர் வியாபாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு ஓணம் சீஸனுக்கான வியா பாரம் தொடக்கத்தில் இருந்தே ஏமாற்றம் அளித்தது. ஆனால், இன்று (நேற்று) பரபரப்பாக நடந்த வியாபாரம் ஆறுதல் அளித் துள்ளது. தேவைக்கு அதிகமான பூக்கள் வந்தும், கடந்த பல ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கேரள வியாபாரிகள் குறைவா கத்தான் வந்தனர். பூக்கள் அதிக மாக குவிந்ததால் வியாபார போட்டி யால் விலையை குறைத்தே கொடுக்க வேண்டிய நிலை ஏற் பட்டது.

சுமார் 200 டன்னுக்கு மேல் கிரேந்தி, கோழிக்கொண்டை, சம்பங்கி, வாடாமல்லி, ரோஜா போன்ற மலர்கள் தேக்கம் அடைந் துள்ளன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x