Published : 10 Sep 2019 09:20 AM
Last Updated : 10 Sep 2019 09:20 AM

பச்சிளங் குழந்தையின் உடலில் 20 நாட்களாக அகற்றப்படாத ஊசி: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் புகார்

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள எம்.எஸ்.ஆர் புரம் பகுதியில் வசித்துவருபவர் பிரபாகரன் (28). இவரது மனைவி மலர்விழி (20). மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 21-ம் தேதி குழந்தையின் இடது கையில் ஓர் ஊசியும், இடது கால் தொடை பகுதியில் ஒரு தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 31-ம் தேதி தாயும் குழந்தையும் வீடு திரும்பியுள்ளனர்.

வீட்டுக்கு வந்த பின்னர் குழந்தை வலியால் துடித்தபடி அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தையின் இடது கால் தொடை பகுதியும் வழக்கத்துக்கு மாறாக வீங்கி கொண்டே வந்துள்ளது. இந்நிலையில், குழந்தையின் பாட்டி தண்ணீர் ஊற்றி நீவி விட்டபடி நேற்று குழந்தையை குளிப்பாட்டியுள்ளார். அப்போது அவரது கையில் குழந்தையின் இடது தொடையில் இருந்து வெளி நீட்டிய மெல்லிய ஊசி குத்தியுள்ளது.

இதனால் அதிர்ச்சி யடைந்த பெற்றோர் குழந்தையின் உடலை பார்த்தபோது செவிலியர் தடுப்பூசி போட்ட இடத்தில் ஊசி அகற்றப்படாமல் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக ஊசியை அகற்றிவிட்டு குழந்தையை மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரசவ வார்டில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் மற்றும் ஊசி செலுத்திய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர் மருத் துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் மனு அளித்தனர். பச்சிளம் குழந்தையின் உடலில் ஊசி அகற்றப்படாமல் இருந்த சம்பவம் மேட்டுப்பாளையம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x