Published : 10 Sep 2019 07:53 AM
Last Updated : 10 Sep 2019 07:53 AM

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையில் ஓணம் பண்டிகைக்கு ரூ.4 கோடி காய்கறி கொள்முதல்: கேரள வியாபாரிகள் வாங்கி சென்றனர்

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு லாரிகளில் அனுப்பப்படும் காய்கறிகள்.

பி.டி.ரவிச்சந்திரன்

ஒட்டன்சத்திரம்

ஓணம் பண்டிகையை முன் னிட்டு, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த 3 நாட் களில் ரூ.4 கோடிக்கு காய்கறி கள் கொள்முதல் செய்யப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட் டுள்ளன.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்தி ரத்தில் உள்ளது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட் டங்கள், கேரளா, கர்நாடகாவுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. முருங்கை, தேங்காய் போன்றவை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப் படு கின்றன. தினமும் 150-க்கும் மேற் பட்ட லாரிகள், மினி லாரிகளில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படு கின்றன.

கேரளாவில் ஓணம் பண்டிகை செப்.11-ம் தேதி கொண்டாடப் படுகிறது. இதையடுத்து கேரள வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டில் இருந்து அதிகளவில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். கடந்த சனி, ஞாயிறு, திங்கள் கிழமை என படிப்படியாக காய்கறி கள் கேரள மாநிலத்துக்கு வியா பாரிகளால் அனுப்பி வைக்கப்பட் டன. வழக்கமாக தினமும் சிறிய, பெரிய என 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு காய் கறிகளை கொண்டு செல்வர்.

ஆனால், ஓணத்தை முன்னிட்டு கடந்த 3 தினங்களாக தொடர்ந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரி களில் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதிக பட்சமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ. 2 கோடிக்கு காய்கறிகள் விற்பனை ஆகின. சனி, திங்கள்கிழமையன்று ரூ.2 கோடிக்கு காய்கறிகள் கேர ளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து வியாபாரி கண்ணன் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டுக்கு வரும் காய்கறிகளில் 50 சதவீதத்துக்கு மேல் கேரளாவுக் குத்தான் செல்கிறது. ஓணம் பண்டி கையை முன்னிட்டு 2 மடங்கு காய்கறிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக தொடர் மழையால் கேரள மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இதனால் ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவது குறைந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓணம் பண்டிகை காலங்களில் ஒட் டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி கள் விற்பனையானதை விட தற்போது குறைந்த விற்பனைதான் நடந்துள்ளது. இதற்கு மழை பாதிப்புதான் காரணம். மற்ற காய்களை விட வெங்காயம், வெண்டைக்காய் போன்றவற்றை அதிகமாக வாங்கிச் சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x