

சேலம்
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்திருப்பதால், நீர் திறப்பும் வெகுவாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று நீர் வரத்து விநாடிக்கு 66 ஆயிரம் கன அடியாக இருந்தது. அதேசமயம் 70 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப் பட்டது. கர்நாடக மாநில காவிரி மற் றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் ஏற்கெனவே நிரம்பிய நிலையில், அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து, கடந்த 7-ம் தேதி மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி யது. நேற்று முன்தினம் இரவு நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 60 ஆயிரம் கனஅடியாகவும் இருந் தது. நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 66 ஆயிரம் கன அடியாக இருந்தது. நீர்மட்டம் 120.94 அடியானது.
அணை நிரம்பிய நிலையில் நீர் வரத்து முழுவதும் உபரியாக திறக்கப் பட்டு வருகிறது. நேற்று காலை விநா டிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறக் கப்பட்ட நிலையில், மாலை 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று 900 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
தண்டோரா மூலம் எச்சரிக்கை
தொடர்ந்து ஆற்றில் அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், காவிரி கரையோர கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனிடையே, அணை நிரம்பிய தையும், ஆற்றில் உபரிநீர் பெருக் கெடுத்து செல்வதையும் சேலம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்துச் செல் கின்றனர்.