Published : 10 Sep 2019 07:46 AM
Last Updated : 10 Sep 2019 07:46 AM

குஜராத் கடல் பகுதியில் மர்ம படகுகள் சிக்கின: தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்; ராணுவ தளபதி எச்சரிக்கையால் பாதுகாப்பு தீவிரம்

சென்னை

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி யுள்ள குஜராத் கடல் பகுதியில் மர்ம படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இருந்து படகு களில் வந்த தீவிரவாதிகள், தாக்கு தல் நடத்தும் சதித் திட்டத்துடன் அரபிக்கடல் வழியாக தென் மாநிலங்களில் புகுந்திருக்கக்கூடும் என்று தென் பிராந்திய ராணுவ தளபதி எஸ்.கே.சைனி எச்சரித் துள்ளார். இதையடுத்து, தமிழகம், கேரளாவில் அரபிக்கடலோரப் பகுதிகள் உட்பட அனைத்து இடங் களிலும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுக்கு பல் வேறு வகைகளில் நெருக்கடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள ராணுவ சட்டக் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தென் பிராந்திய ராணுவ தளபதி எஸ்.கே.சைனி கலந்துகொண்டார். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர் பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் தென் மாநிலங் களில் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தீவிரவாத தாக்கு தல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் எல்லை யான குஜராத்தின் சர் கிரீக் கடல் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்த படகுகள் கைப்பற்றப் பட்டுள்ளன. பாகிஸ்தானில் இருந்து இந்த படகுகளில் வந்த தீவிரவாதிகள், அரபிக்கடல் வழி யாக தென் மாநிலங்களில் புகுந் திருக்கக்கூடும் என்று தெரிகிறது. தீவிரவாத தாக்குதல்களை தடுப் பதற்கான அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளன. மர்ம படகுகளில் வந்தவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இவ்வாறு எஸ்.கே. சைனி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து செயல் படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிர வாதிகள், இந்திய ராணுவ முகாம் களையும், ஜம்மு-காஷ்மீரில் பாது காப்பு படையினரையும் குறி வைத்து தாக்குதல் நடத்த திட்ட மிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை ஏற்கெனவே எச்சரித்துள்ள நிலையில், தென் பிராந்திய ராணுவ தளபதி கூறியிருப்பது முக்கியத் துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதி களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாகன சோதனை நடத்தும் போலீஸ் குழுக்களின் எண்ணிக்கை அதி கரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பட்டது. இதில் முக்கிய அதிகாரிகள் மட்டும் கலந்துகொண்டனர். தேசிய பாதுகாப்பு முகமையின் (என்ஐஏ) தென் மண்டல அதிகாரிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வரு கின்றனர்.

கேரள டிஜிபி எச்சரிக்கை

அரபிக்கடல் வழியாக தீவிர வாதிகள் ஊடுருவக்கூடும் என்று ராணுவம் எச்சரித்துள்ளதால், கேரளாவின் அனைத்து மாவட் டங்களிலும் பாதுகாப்பை பலப் படுத்துமாறு போலீஸாருக்கு மாநில டிஜிபி லோக்நாத் பெகெரா அறிவுறுத்தியுள்ளார்.

ஓணம் பண்டிகை நாளை (11-ம் தேதி) கொண்டாடப்படும் நிலையில், கேரளா முழுவதும் மக்கள் பல்வேறு கொண்டாட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை சீர்குலைக்கும் விதமாக அசம்பாவித சம்பவங்களை தீவிர வாதிகள் நிகழ்த்தலாம் என்பதால், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு டிஜிபி எச்சரித்துள்ளார்.

கேரளாவின் கடலோரப் பகுதி களிலும் கூடுதல் பாதுகாப்பு, கண் காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் கூடு தல் போலீஸார் குவிக்கப்பட்டு பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளி லும் கண்காணிப்பு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x