Published : 10 Sep 2019 07:39 AM
Last Updated : 10 Sep 2019 07:39 AM

1,800 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்: தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறை தீவிரம்

சென்னை அரசு மருத்துவமனை சமூக மருத்துவத் துறை சார்பில் நேற்று நடைபெற்ற டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்குகிறார் மருத்துவமனை டீன் ஜெயந்தி. மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் இதுவரை 1,800 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகா தாரத் துறை தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். காய்ச்சலின் தீவிரத்தால் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டின் தொடக்கத்திலும் தமிழ கத்தில் டெங்கு பரவத் தொடங்கி யது. சுகாதாரத் துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை களால் டெங்கு கட்டுப்படுத்தப் பட்டது.

இந்நிலையில், சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மதுரை, கோவை உட்பட தமிழ கத்தின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கி யுள்ளது. கடலூரில் மட்டும் 9 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர, தமிழகத்தின் பல பகுதிகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் நேற்று வரை 1,800-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக மத்திய, மாநில அரசுகளின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 385 மருத்துவக் குழுக்கள் மற்றும் 42 சுகாதார விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பகுதிவாரியாக களஆய்வு மற்றும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

தேங்கியிருக்கும் சுத்தமான நீரில்தான் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி யாகின்றன. எனவே, திறந்தவெளி யில் உள்ள சிமென்ட் தொட்டி, தண்ணீர் தொட்டி, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டு, கப், தேங்காய் ஓடு, வாளி, டயர் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு நன் றாக தேய்த்து கழுவி மூடி வைக்க வேண்டும். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏடிஸ் கொசுக்கள் பகலில் மட்டும் கடிக்கக்கூடியது. அதனால் வீடுகளில் பகல் நேரத்தில் குழந் தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும். டெங்கு நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடிக்கும் ஏடிஸ் கொசு மற்றொருவரை கடிக்கும்போதுதான் அவருக்கு டெங்கு பரவுகிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் மக்கள் தாங்களாகவே மருந்துக் கடைக்கு சென்று மருந்து, மாத்திரை வாங்கி உட்கொள்ளக் கூடாது. காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x