செய்திப்பிரிவு

Published : 09 Sep 2019 20:00 pm

Updated : : 09 Sep 2019 20:00 pm

 

பெண்கள் கையாளும் வகையில் தண்ணீர் கேன்களை வடிவமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

high-court-dismisses-case-of-women-demanding-water-cane-design

சென்னை,

பெண்கள் கையாளும் வகையில் தண்ணீர் கேன்களை வடிவமைக்கும் வகையில் விதிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், மனுதாரர் விரும்பும் வகையில் உத்தரவிட நீதிமன்றம் வணிக வளாகமல்ல என்று கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னையில் பயன்படுத்தப்பட்டு வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களின் வடிவத்தை மாற்றி அமைக்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தீபா ஸ்ரீ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களை பெண்களால் கையாள முடியவில்லை என்றும் அவற்றைச் சுகாதாரமான முறையில் பராமரிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளைப் பெற நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல எனவும், மனுதாரர்களின் இது போன்ற கோரிக்கைகளை அரசிடம் கொண்டு போய் சேர்க்க தபால் நிலையமும் அல்ல எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

High CourtDismisseWomenDemandingWater cane designபெண்கள் கையாளும் வகையில் தண்ணீர் கேன்உயர் நீதிமன்றம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author