Published : 09 Sep 2019 10:05 AM
Last Updated : 09 Sep 2019 10:05 AM

தோப்புக்கொல்லையில் கஜா புயல் பாதிப்பால் 9 மாதங்களாக முடங்கிக் கிடக்கும் வனவியல் விரிவாக்க மையம்: விரைந்து மீட்டெடுக்க வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

கே.சுரேஷ்

புதுக்கோட்டை

கஜா புயல் பாதிப்பால் கடந்த 9 மாதங்களாக செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கும் தோப்புக்கொல்லை வனவியல் விரிவாக்க மையத்தை சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள அரசு வனவியல் விரிவாக்க மையத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் மரக்கன்றுகள் தயாரித்து விவசாயிகளுக்கு விநியோகிக் கப்பட்டு வந்தது. மேலும், அரசின் திட்டங்களுக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிப்புக்கு மானியம் வழங்கப்படும்.

இங்கு மாதந்தோறும் மரம் வளர்ப்போர் சங்கக் கூட்டம் நடைபெறும். விவசாயிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வன அலுவலர்களுக்கான பயிற்சியும் அவ்வப்போது இங்கு நடத்தப்படும். இம்மாவட்டத்தில் வனத்தை விரிவாக்கம் செய்வதில் முக்கிய பங்கு இந்த வனவியல் விரிவாக்க மையத்துக்கு உண்டு.

இம்மையத்தில் தேக்கு, மூங்கில், இலுப்பை, புளி, சவுக்கு, யூக்கலிப்டஸ், முந்திரி, சவுக்கு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மரங்களைக் கொண்டு மாதிரி வனப் பகுதி பராமரிக்கப்பட்டு வந்தது. மேலும், மண்புழு உரம் தயாரிப்பதற்கான கட்டமைப்புடன், அதற்குரிய பயிற்சியும் அளிக்கப் பட்டது. வன விரிவாக்க பணியில் தமிழகத்துக்கே முன்மாதிரியாக திகழ்ந்த இந்த வனவியல் விரிவாக்க மையானது கடந்த ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்டு உருக்கு லைந்தது. இங்கிருந்த மரங்கள் முழுமையாக வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டன. சில மரங்கள் கட்டிடங்களின் மீதும் சாய்ந்து கிடக்கின்றன.

இம்மையத்தில் உள்ள மாதிரி வனப்பகுதிக்கு செல்லும் வழியில் விழுந்து கிடந்த மரங் கள் மட்டும் ஓரமாக நகர்த்தி வைக்கப்பட்டுள்ளனவே தவிர, வேறு எந்தப் பணியும் மேற் கொள்ளப்படவில்லை. அதோடு, மரக்கன்றுகள் வளர்ப்பு பணி, விவசாயிகளுக்கு பயிற்சி போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படாமல் கடந்த 9 மாதங்களாக வனவியல் விரிவாக்க மையம் எவ்வித செயல்பாடும் இன்றி, முடங்கிக் கிடப்பதாக குற்றஞ்சாட்டும் விவசாயிகள், இந்த மையத்தை அரசு விரைவில் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்கின்றனர்.

இதுகுறித்து மரம் வளர்ப்பு ஆர்வலர் தங்க.கண்ணன் கூறியது: புயலால் சேதம் அடைந்த மரங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். மேலும், சேதம் இல்லாத மரங்களை பாதுகாக்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்டு, எவ்வித பிடிமானமும் இல்லாத விவசாயிகள்கூட படிப்படியாக மீண்டுவரும் நிலையில், அரசின் வனத்துறை மீளமுடியாமல் இருப்பது வியப்பாக உள்ளது. எனவே, சிறப்பு நிதி ஒதுக்கி முடங்கிக் கிடக்கும் இம்மையத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

இதுகுறித்து தோப்புக் கொல்லை வனவியல் விரிவாக்க மையத்தினர் கூறியபோது, ‘‘மரக் கன்று வளர்ப்புக்குரிய அரசின் திட்டங்கள் ஏதும் இம்மையத்துக்கு தற்போது ஒதுக்கப்படவில்லை என்பதால், மரக்கன்றுகள் உற் பத்தி செய்யப்படவில்லை. சேதமடைந்த மரங்கள் அரசு வழிகாட்டுதல் நெறி முறைகளைப் பின்பற்றி விரைவில் அகற்றப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x