Published : 09 Sep 2019 08:10 AM
Last Updated : 09 Sep 2019 08:10 AM

ரூ.50 லட்சம் செலவாகும் நிலையில் இலவசமாக 2 முதியோருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதய வால்வு மாற்று: இந்தியாவில் முதல் முறையாக சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை சாதனை

டாக்டர் ஜி.கார்த்திகேயன்

சி.கண்ணன்

சென்னை

இந்தியாவில் முதல்முறையாக சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இரண்டு முதியவர்களுக்கு அறு வைச் சிகிச்சை இல்லாமல் இதய வால்வு மாற்று சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனைப் படைத் துள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் அறுவை சிகிச்சை செய்யாமல் இதய வால்வு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட சில நகரங் களில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் மட்டும் இந்த நவீன சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா சாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் விவ சாயிகளான நல்லசாமி (67), சுப்பு ராம் (73) ஆகியோருக்கு இதய இயல் துறை தலைவர் ஜி.கார்த்தி கேயன் தலைமையிலான குழு வினர் அறுவை சிகிச்சை செய்யா மல் நவீன முறையில் இதய வால்வு மாற்று சிகிச்சை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக டாக்டர் ஜி.கார்த்திகேயன் கூறியதாவது: ராஜபாளையம், தாராபுரம் பகுதி யைச் சேர்ந்த முதியவர்களான நல்லசாமி, சுப்புராம் ஆகியோர் இந்த மருத்துவமனைக்கு வந்தனர். நடக்கும்போது அதிகமாக மூச்சு வாங்குவதாக தெரிவித்தனர். பரிசோதனை செய்து பார்த்தபோது, இதயத்தின் அயோட்டிக் வால்வு கால்சியத்தால் முழுவதுமாக அடைத்துக் கொண்டிருந்தது.

வழக்கமாக நெஞ்சுபகுதியில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து அடைப்பு ஏற்பட்டிருக்கும் வால்வை அகற்றிவிட்டு, புதிய வால்வு பொருத்தப்படும். ஆனால், இவர் களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை இருந்தது.

அதனால், தனியார் மருத்துவ மனைகளில் செய்யப்படும் அறு வைச் சிகிச்சை செய்யாமல் இதய வால்வு மாற்று சிகிச்சை செய்தால் இருவரின் உயிரையும் காப்பாற்றி விடலாம். ஒரு மாற்று வால்வு மட்டும் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆகும். இந்த நவீன சிகிச்சையை ஒருவருக்கு செய்ய ரூ.25 லட்சம் வரை செல வாகும் என்பதை தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இருவருக்கும் இந்த நவீன சிகிச்சையை முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செய்ய அனுமதி அளித்தது.

இதையடுத்து, இருவரின் தொடை பகுதியில் உள்ள ரத்தக் குழாய் வழியாக சிறிய கருவி களின் உதவியுடன் மாற்று வால்வை கொண்டு சென்று இதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்த அயோட் டிக் வால்வுக்கு பதிலாக பொருத் தினோம். ஒருவருக்கான சிகிச்சை 30 நிமிடம் நடைபெற்றது. இந்த சிகிச்சையில் எங்களுடன் காவேரி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் ஏ.பி.கோபாலமுருகன் உடன் இருந்தார்.

இந்த சிகிச்சை முடிந்த மறுநாள் இருவரும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினர். இருவரும் நலமாக உள்ளனர். தொடர் மருத்துவப் பரிசோத னைக்கு வருகின்றனர். இருவருக் கும் பொருத்தப்பட்ட வால்வுகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. வால்வுகள் மட்டும் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து வாங்கப்பட்டன. மற்ற அனைத்து செலவுகளும் மருத்துவ மனையில் உள்ள காப்பீட்டு திட்ட வருவாய் மூலம் செய்யப்பட் டது. இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் முதல் முறை யாக இந்த மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவாகும் அறு வைச் சிகிச்சை செய்யாமல் இதய வால்வு மாற்று சிகிச்சை இருவ ருக்கு வெற்றிகரமாக செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

காப்பீட்டில் சேர்ப்பு

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தொடர்பு அலுவலர் வி.ஆனந்தகுமாரிடம் கேட்டபோது, “அறுவை சிகிச்சை இல்லாமல் செய்யப்படும் இதய வால்வு மாற்று சிகிச்சை இன்னும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஒரு சிறப்பு முயற்சியாக இருவருக்கு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வரும் ஜனவரி மாதத்தில் இந்த சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் முறைப்படி சேர்க்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x