

சென்னை
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி நாளை (10-ம் தேதி) அதிகாலை 2.45 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடு களை ஈர்க்க கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். அவருடன் அமைச்சர் கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் சென்றது. 3 நாட்கள் லண் டனில் தங்கி இருந்த அவர், முதலீட் டாளர்களையும் தமிழ் அமைப்பு களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத் தார். லண்டனில் இருந்து கடந்த 1-ம் தேதி அமெரிக்கா சென்ற போது, அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் ரூ.5,050 கோடிக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் அமெரிக்க பய ணத்தை முடித்து கொண்டு 7-ம் தேதி இரவு துபாய் சென்ற அவர், 2 நாள்கள் அங்கு தொழில்முனை வோர்களுடன் ஆலோசனை நடத் தினார்.
இந்நிலையில், 13 நாள் வெளி நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு துபாயில் இருந்து புறப் பட்டு நாளை அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்புகிறார். இதனை தமிழக அரசின் செய் திக்குறிப்பு தெரிவிக்கிறது.