

கி.மகாராஜன்
மதுரை
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு வழங்கு வதற்காக ரூ.1,093 கோடி ஒதுக்கீடு செய்து 2 வாரம் கடந்தும் இதுவரை பணப்பலன்கள் வழங்காததால் 2,400 ஓய்வூதியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தில் பணிபுரிந்து 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரை ஓய்வுபெற்ற 2,400 பேருக்கு பணப்பலன் பாக்கியை வழங்கு வதற்காக ரூ.1,093 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. இது தொடர்பாக தமிழக போக்குவரத் துக் கழக செயலர். ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அரசாணை பிறப் பித்தார். இந்த நிதி ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
நிதி ஒதுக்கி 2 வாரங்களாகியும் ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் கள் இதுவரை வழங்கப்பட வில்லை. இதனால் ஓய்வூதியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் வட் டாரத்தில் கேட்டபோது, "முதல்வர் வெளிநாடு சென்றிருப்பதால், அவர் சென்னை திரும்பிய பிறகு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரை ஓய்வுபெற்றவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணப் பலன் தரப்படவில்லை. இந்நிலை யில், 2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க எவ்வளவு நிதி தேவைப்படும் என்ற விவரங்களை தாக்கல் செய்ய அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 460 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். இவர் களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்க ரூ.190 கோடி தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத னால் 2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களும், தங்களுக்கு விரை வில் ஓய்வூதியப் பலன்கள் கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள னர்.