Published : 08 Sep 2019 08:15 AM
Last Updated : 08 Sep 2019 08:15 AM

என்எஸ்எஸ், என்சிசி போன்று மாணவர்கள் மத்தியில் தோட்டக்கலைத் துறை புது முயற்சி

ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் என்எஸ்எஸ், என்சிசி போன்று, ‘ஹார்ட்டி கிளப்’ என்ற தோட்டக் கலை குழுக்கள் அமைக்கும் புதிய திட்டத்தை தோட்டக்கலைத் துறையினர் தொடங்கி உள்ளனர்.

மாணவர்களிடம் இருக்கும் ஆளுமைத் திறன், தனித்திறமை களை வெளிப்படுத்தவும், சமூகத் தின் மீது அக்கறை, நாட்டுப்பற்றை ஏற்படுத்தவும் பள்ளி, கல்லூரி களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

அதுபோல, மாணவர்களிடம் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி மற்றும் காய்கறிகளை சாப்பிடுவ தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி யும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வும், ஆர்வமுள்ள மாணவர்களை எதிர்காலத்தில் விவசாயிகள் ஆக்க வும் தோட்டக்கலைத் துறை நட வடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகளில் 'ஹார்ட்டி கிளப்' எனும் தோட்டக்கலை குழு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த கிளப் மூலம் தோட்டக் கலை பயிர்களான பழங்கள், காய் கறிகள், மலர்கள், மூலிகை பயிர் கள், பணப் பயிர் மற்றும் அலங் காரச் செடிகள் தொடர்பான தொழில் நுட்பங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் மாணவர்களிடம் விழிப் புணர்வு ஏற்பட்டு இயற்கை வளங் களை பாதுகாத்திடும் வாய்ப்பும், சாகுபடி அனுபவமும் கிடைக்கும்.

இதுபற்றி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது: பள்ளி, கல்லூரி களில் அமைக்கப்படும் குழுக்க ளுக்கு தோட்டக்கலைத் துறையில் டெபாசிட் தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

குழுவில் இடம் பெற்றுள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த நிதியில் தங்களது பள்ளி வளாகத் தில் தோட்டங்களை அமைத்து பராமரிக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை தோட்டக்கலைத் துறையினர் வழங் குவர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தோட்டக்கலைப் பண்ணையில் ‘ஹார்ட்டி கிளப்’ முகாம் நடத்தப் படும்.

விரைவில் இதற்கான விண்ணப் பங்கள் சென்னையில் உள்ள தோட் டக்கலைத் துறை இயக்குநரகம் மற்றும் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அலுவல கங்களில் வழங்கப்படும்.

இத்திட்டம் அரசு பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும். விருப்ப முள்ள பள்ளி மற்றும் கல்லூரி நிர் வாகத்தினர் இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x