

சென்னை
தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற் கிறார். ஐதராபாத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் மற்றும் அமைச்சர்கள் பி.தங் கமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழக பாஜக தலைவராகக் கடந்த 2005-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். இந்நிலையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது புதிதாக உருவாக்கப்பட்ட தெலங் கானா மாநிலத்தின் முதல் ஆளு நராக தமிழிசை சவுந்தரராஜனை நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.
ஆளுநராக நியமிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார். இந்நிலை யில், தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநராக இன்று அவர் பொறுப்பேற்கிறார். ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் காலை 11 மணிக்கு நடக்கும் விழாவில், அம் மாநில தலைமை நீதிபதி பதவிப் பிரம்மாணம் செய்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்து வருகிறது.
முன்னதாக, நேற்று சென்னை வந்த தெலங்கானா ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரிகள், தமிழிசை சவுந்தரராஜனை பதவியேற்க வரு மாறு முறைப்படி அழைத்ததுடன், ஆளுநரின் கடமைகள், பொறுப்பு கள் குறித்தும், விழா நிகழ்வுகள் குறித்தும் விளக்கினர்.
தெலங்கானா ஆளுநர் பதவி யேற்பு விழாவில், அம் மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். தமிழகம் சார்பில் இவ்விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவே ஐதராபாத் சென்றார். அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் இன்று ஐதராபாத் செல்கின்றனர்.