Published : 08 Sep 2019 08:01 AM
Last Updated : 08 Sep 2019 08:01 AM

அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு துபாய் சென்றார் முதல்வர் பழனிசாமி: தொழில்முனைவோர் கூட்டத்தில் பங்கேற்கிறார்

சென்னை

அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் உள்ள கழிவுநீர் மறுசுழற்சி மையத்தை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் அங் கிருந்து துபாய்க்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு 2 நாட்கள் தங்கி முதலீட்டாளர்களை சந்திக்கிறார்.

தமிழகத்துக்கு அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் பழனிசாமி 14 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28-ம் தேதி துபாய் சென்று அங் கிருந்து லண்டன் சென்ற முதல் வர், 3 நாட்கள் லண்டன் பய ணத்தை முடித்துக் கொண்டு, செப்.1-ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ சென்றார். அங்கு பல்வேறு தொழில் முத லீட்டாளர்களை சந்தித்தார். மேலும் புதிய தொழில் நுட்பங்கள் குறித் தும் அறிந்து கொண்ட அவர், கடந்த 6-ம் தேதி சான்பிரான்சிஸ் கோவில் இருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். அங்குள்ள தமிழர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கழிவுநீர் மறுசுழற்சி

தொடர்ந்து, நேற்று காலை லாஸ்ஏஞ்சல்ஸ், அனாஹெய்ம் நகரில் உள்ள கழிவுநீர் மறுசுழற்சி மையத்துக்குச் சென்றார். அங்கு முதல்வரை, அனாஹெய்ம் நகர மேயரும் தொழிலதிபருமான ஹாரி எஸ்.சித்து வரவேற்றார். அதன்பின், மேயருடன் கழிவுநீர் மறு சுழற்சி மையத்தை பார்வையிட்டார். அப்போது மறுசுழற்சி மூலம் கழிவுநீரை சுத்தமாக்கி மீண்டும் பயன்படுத்தும் முறை குறித்து முதல்வருக்கு விளக்கினர்.

தமிழகத்தில் உள்ள பெருநிறுவ னங்கள், அடுக்குமாடி குடியிருப்பு களில் மறுசுழற்சி முறையில் நீரை மீண்டும் பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தும்படி தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்தை முதல்வர் ஆய்வு செய்து, அதை தமிழகத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்வின்போது, அமைச்சர் கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதய குமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலர் கே.சண்முகம், அரசு செயலர்கள் நா.முருகானந்தம் (தொழில்துறை), கே.கோபால் (பால்வளம்), சந்தோஷ் பாபு (தகவல் தொழில்நுட்பம்), முதல் வரின் செயலர்கள் எஸ்.விஜய குமார், ஜெய முரளிதரன் உள் ளிட்டோர் இருந்தனர்.

துபாய் பயணம்

இதைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களுடன் துபாய் புறப்பட்டுச் சென் றார். நேற்றிரவு துபாய் சென்ற அவர், இன்றும் நாளையும் அங்கு தங்கியிருக்கிறார்.

இரு தினங்களும் துபாயில் ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் ’பிசினஸ் லீடர்ஸ் போரம்’ மற் றும் இந்திய துணைத் தூதர கம் இணைந்து நடத்தும், துபாய் தொழில் முனைவோர் ஆலோச னைக் கூட்டத்தில் சிறப்பு விருந் தினராக பங்கேற்கிறார். அதன்பின், துபாய் தொழில்முனைவோரிடம் முதலீட்டுக்கு அழைப்பு விடுக்கும் முதல்வர் செப்.10-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x