Published : 08 Sep 2019 07:49 AM
Last Updated : 08 Sep 2019 07:49 AM

பயிர்களை தாக்கும் நோய்களை கண்டறிந்து, தீர்வு காண இயற்கை விவசாயத்துக்கு உதவும் ‘நம்மாழ்வார்’ செயலி: திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைப்பு

பெ.ராஜ்குமார்

திருச்சி

இயற்கை விவசாயம் மேற்கொள் ளும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், பயிர்களைத் தாக்கும் நோய்களை கண்டறிந்து, அதற் குரிய தீர்வுகளை அளிக்கும் செயலியை திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிமாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தில், ரசாயன உரங்கள், வீரிய ஒட்டு ரக விதைகள் போன்ற வற்றால் மண் வளமும், இயற்கை வளமும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

நமது மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக் காக்க, ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை வேளாண் மையை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு தற்போது இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை கடை பிடிப்பது குறித்து தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தாலும், அதற்கான தேவை அதிகரித்துக்கொண்டேதான் இருக் கிறது.

மகசூல், தரம் குறைவு

விவசாயம் மேற்கொள்ளும் போது, சுற்றுச்சூழல் சீரழிவால் பயிர்களில் நோய்த் தொற்று தவிர்க்க இயலாத ஒன்றாக உள் ளது. இதனால், உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்களின் மக சூலும், தரமும் குறைகிறது.

தற்போதைய நடைமுறை யில் பயிர்களின் நோய்த் தொற்றை யூகத்தின் அடிப்படையிலும், மற்றவர்களின் ஆலோசனைப் படியும் கண்டறிந்து அதற்குரிய தடுப்பு முறைகளை மேற்கொள் கின்றனர்.

நாட்டில் 90 சதவீத விவசாயிகள், நோய்த்தொற்றை தடுக்க அல்லது சரிசெய்ய ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லி மருந்துகளையுமே பயன்படுத்துகின்றனர்.

இதனால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன், உணவுப் பொருட்களும் நஞ்சாகின்றன. மேலும், யூகத்தின் அடிப்படை யில் கண்டறியப்படும் நோய்த் தொற்று துல்லியமானதாக இருக்கவும் வாய்ப்பு இல்லை.

எனவே, பயிர்களின் நோய்த் தொற்றை ஆரம்பக் கட்டத்திலேயே எளிதாக, துல்லியமாக கண்டறிய வும், அதை சரிசெய்யவும் இயற்கை விவசாய வழிமுறைகளை உள்ள டக்கிய ‘நம்மாழ்வார்’ என்ற தொழில் நுட்ப செயலியை திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின் னணு மற்றும் தொடர்பியல் துறை மாணவர்கள் வி.சபரிநாராயணன், பி.மீனாட்சிசுந்தரம், ஆர்.ராகுல், கே.மகாபிரபு ஆகியோர் பேராசிரி யர் முனைவர் கா.வினோத்குமார் வழிகாட்டுதலுடன் உருவாக்கி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது:

இயற்கை விவசாயம் மேற் கொள்ளும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த செயலியை உருவாக்கியுள்ளோம்.

செயலியில் படம் ‘அப்லோடு’

நோய் தாக்கிய பயிர்களை விவசாயிகள் தங்களது செல் போனில் புகைப்படம் எடுத்து, அதை நம்மாழ்வார் செயலியில் அப்லோடு செய்தால், செயலியில் உள்ள Image Processing என்ற தொழில்நுட்ப உதவியுடன் பகுப்பாய்வு நடைபெறும்.

இந்த செயலி தேவைக்கேற்ப புகைப்படத்தை உருப்பெருக்கம் செய்தும், வடிவத்தை மாற்றி அமைத்தும், முன்பே சேகரித்து வைக்கப்பட்டுள்ள விவரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்யும்.

இறுதியாக செயலி மாதிரிகளின் அடிப்படையில் தனது முடிவை சமர்ப்பிக்கும். அதன்படி, பயிரைத் தாக்கியுள்ள நோயின் தன்மை, பாதிக்கப்பட்ட அளவு போன்ற விவரங்களை பெறமுடிகிறது.

அத்துடன், பயிரில் ஏற்பட் டுள்ள நோயை சரிசெய்ய தேவை யான இயற்கை விவசாய வழிமுறை களையும், ரசாயன கலப்பில்லாத பூச்சிக்கொல்லி மருந்துகளையும், தயாரிப்பு முறைகளையும் அளிக் கிறது. மேலும், இதுகுறித்து விவ சாயிகளுக்கு சந்தேகம் ஏற்பட் டால், அதுகுறித்து விளக்கம் பெற, இயற்கை விவசாய ஆராய்ச்சி யாளர்களின் தொடர்பு எண்களை யும் அளிக்கும்.

ஈரப்பதத்தை கண்டறிதல்

மேலும், இதில் உள்ள மற்றொரு தொழில்நுட்பம் மூலம் நிலத்தின் ஈரப்பதத்தை கண்டறிந்து, மின் மோட்டாரை ஆன் மற்றும் ஆஃப் செய்யும் வகையில் தானியங்கி சுவிட்ச் வசதியும் உள்ளது. இதன் மூலம் தண்ணீரை வீணாக்காமல் தடுக்கவும் மற்றும் மின்சாரத்தை சேமிக்கவும் முடியும்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் பயிர்களில் ஏற்பட்டுள்ள நோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதனை சரிசெய்வதால் அதிக மகசூல் பெறமுடியும். மேலும், நிலத்தின் தன்மையை கெடாமலும், சுற்றுச் சூழல் மாசுபடாமலும் பாதுகாக்க முடியும். இந்த செயலி விரைவில் கூகுள் ‘பிளே ஸ்டோர்’-ல் கிடைக்கும்.

இந்தச் செயலியை உருவாக்க எங்களுக்கு பெரிதும் உதவிய துறைத்தலைவர் முனைவர் கார்த் திகை லட்சுமி, கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமரன், வளாக இயக்குநர் முனைவர் சந்திரன் ஆகியோருக்கும், இயற்கை விவ சாய விஞ்ஞானி மறைந்த நம்மாழ் வாரின் ‘வானகம்’ அமைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x