Published : 07 Sep 2019 10:26 AM
Last Updated : 07 Sep 2019 10:26 AM

காவலர்களுக்கு தலைக்கவசம் கட்டாயமில்லையா?

ந.முருகவேல்

விருத்தாசலம்

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பி ருந்தே சென்னை உயர் நீதிமன் றம், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்; கார் ஓட்டிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, போக்குவரத்து காவல்துறை இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டிச் செல்பவர்களுக்கு அபராத மும் விதித்தது.

இந்த நிலையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி தலைக்கவசமின்றி இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றால் அவர்களுக்கு ரூ.1000-ம் அபராதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், காவல்துறையினர், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, தலைக் கவசம் அணியாதவர் களைக் கண்ட றிந்து, அவர்களுக்கு திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அபராதம் விதித்து வருகின்றனர்.

அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனத்தைக் கையாளும் காவல்துறையினர் முன்மாதிரியாக திகழ வேண்டும் என காவல்துறை தலைமை அறிவுறுத்தியுள்ளது. அனைத்துக் காவலர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து தான் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லவேண்டும் எனவும், அவ்வாறு தவறுபவர்களுக்கு நிர்வாக ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்களை பணியிடை நீக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

இதனால் காவல்துறையினர் தலைக்கவசம் குறித்த விழிப் புணர்வை பொதுமக் களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.

தலைக்கவசத்துடன் இருசக்கர வாகனம் ஓட்டிவரும் நபர்களுக்கு இனிப்பு வழங்கி ஊக்குவிக்கின்ற செயலில் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெய குமார் இறங்கியுள்ளார். அதே போன்று கடலூர் மாவட்டம் மருதூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பொன்.சிவபெருமாள் என்பவர் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி பாடல் எழுதி, அதை பாடியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற எண்ணற்ற நடவடிக் கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டக் காவல்துறையில் ஆங்காங்கே சில காவலர்கள் தலைக்கவசமின்றியே இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது தொடர்கிறது.

நேற்று மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட இரு சக்கர வாகனத்தில் வந்திருந்த காவலர்களில் பெரும்பாலானோர் தலைக்கவசமின்றியே பயணித் தனர்.

விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்.பி ஆகியோரும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x