Published : 07 Sep 2019 08:41 AM
Last Updated : 07 Sep 2019 08:41 AM

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் வளர்ச்சி: நாமக்கல் மாவட்டத்துக்கு தேசிய விருது

நாமக்கல் 

தேசிய அளவில் பெண் குழந்தை கள் பிறப்பு விகிதத்தில் வளர்ச்சி பெற்றுள்ள 10 மாவட்டங்களில், நாமக்கல் மாவட்டமும் இடம் பிடித்துள்ளது. டெல்லியில் நடந்த விழாவில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதற்கான விரு தினை வழங்கி பாராட்டுத் தெரி வித்தார்.

பெண் குழந்தைகளைப் பாது காத்து, அவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்குவதை உறுதிப் படுத்தும் வகையில், கடந்த 2015-ம் ஆண்டில், ‘பெண் குழந்தை களைக் காப்போம்; பெண் குழந் தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங் கியது. தேசிய அளவில் ஆண் - பெண் பாலின விகிதாச்சாரம் குறைவாக உள்ள, 640 மாவட் டங்களில் இத்திட்டம் செயல்படுத் தப்பட்டது. பாலின விகிதாச் சாரத்தை உயர்த்தும் வகையிலும், பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இம் மாவட்டங்களில் மேற்கொள்ளப் பட்டன.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை யால் செயல்படுத்தப்பட்ட இத் திட்டத்தின் மூலம், தேசிய அளவில் 10 மாவட்டங்களில் ஆண் - பெண் பாலின விகிதம் கணிசமாக உயர்ந் துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில், ஆண் - பெண் பாலின விகிதத்தில் வளர்ச்சி பெற்றுள்ள ஹரியானா, உத்தராகண்ட், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக் கப்பட்டது.

இத்துடன், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் வளர்ச்சி பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டம் மற்றும் கிழக்கு காமெங் (அருணாசல பிரதே சம்), மகேந்திரகார், பீவாணி (ஹரி யானா) உதம் சிங் நகர் (உத்தரா கண்ட்), ஜல்கான் (மகாராஷ்டிரா), இடவா (உத்தரப்பிரதேசம்), ராய்கர் (சத்தீஸ்கர்), ஜோத்பூர் (ராஜஸ்தான்) ஆகிய மாவட்டங் களுக்கு விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய பெண்கள் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டுத்துறை அமைச் சர் ஸ்மிருதி இரானி விழாவில் பங்கேற்று விருதுகளை வழங் கினார். அப்போது அவர் கூறும் போது, பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்குப் பார்வையோடு, ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம்’ திட்டத்தை 2015-ம் ஆண்டு கொண்டு வந்தார். இந்த திட்டம் சிறப்பாக செயலாக்கப்பட்டதால், ஆண் - பெண் பாலின விகிதம் 918-லிருந்து (ஆயிரம் ஆண்களுக்கு) 931 ஆக 13 புள்ளி உயர்ந்துள்ளது என்றார்.

நாமக்கல் விருது பெற்றது எப்படி?

நாமக்கல் மாவட்டத்தில் பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக் கப்படும் சம்பவங்கள் அதிக அளவில் இருந்ததால், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருந்தது. மத்திய அரசின் பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டத்தின் மூலம், பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும், பெண் குழந்தை களின் முக்கியத்துவம் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியால், பெண் பாலின விகிதம் தற்போது உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, நாமக் கல் மாவட்டத்தில் உள்ள பெரும் பாலான ஸ்கேன் சென்டர்களில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கூறும் நிலை இருந்து வந்தது. கருவிலேயே குழந்தை பெண் எனத் தெரிந்தால், அதை கலைத்துவிடும் சம்பவங்களும் நடந்து வந்தன.

கடந்த இரு ஆண்டுகளில் அனைத்து ஸ்கேன் சென்டர்களி லும் அதிரடியாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அங்கீகாரம் இல்லாத மையங்கள் மூடப்பட்டன. கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய் யும்போது, பாலின விவரத்தை கூறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விதிமுறைகளை மீறிய ஸ்கேன் சென்டர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பலனாக பெண் குழந்தைகள் கரு வில் கொல்லப்படுவது முழுமை யாகத் தடுக்கப்பட்டது. இத்துடன் பெண் குழந்தைகளை காக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கிராமங்கள்தோறும் செய்யப்பட்ட பிரசாரங்களும் இந்த சாதனையை புரிய காரணமாக அமைந்தது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x