

சென்னை
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த அதிகாரிகள் நிகழ்த்திய வீரதீர சாகச நிகழ்ச்சி, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.
சென்னை, பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், முப்படை பணிகளில் சேரும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதிலும் இருந்து தேர்வு பெற்ற 204 அதிகாரிகள் இங்கு கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தனர். அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று (செப்.7) நடைபெறுகிறது.
இதையொட்டி, பயிற்சி முடித்த அதிகாரிகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் பரங்கிமலையில் உள்ள பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றன. இவ்விழாவில், லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சீவ் கனல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
சாகச வீரர்களுக்கு பரிசு
இங்குள்ள குதிரைப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்ற குதிரை ஏற்ற நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அடுத்து, ஜிம்னாஸ்டிக் பயிற்சி நடை பெற்றது. அதைத் தொடர்ந்து, பெங்களூரூ பாரா ரெஜிமென்டல் மையத்தின் சார்பில், பாரா மோட்டார் சாகச நிகழ்ச்சி நடை பெற்றது. பின்னர், தற்காப்புக் கலை பயிற்சி நிகழ்ச்சி நடை பெற்றது.
இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி பல் வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. இந்த நிகழ்ச்சிகள், பார்வை யாளர்களை மிகவும் கவர்ந்தன.
நிகழ்ச்சியின் முடிவில், சிறப்பாக திறமைகளை வெளிப் படுத்திய பயிற்சி அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.