திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை குறித்து திரை துறையினருடன் அமைச்சர் ஆலோசனை

திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை குறித்து திரை துறையினருடன் அமைச்சர் ஆலோசனை
Updated on
2 min read

சென்னை

திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற அரசின் முடிவை செயல்படுத்துவது குறித்து திரைத் துறையினர், திரையரங்கு உரிமையாளர்களுடன் செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார்.

அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப் படும் என தமிழக அரசு அறிவித் திருந்தது. இதை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை தலை மைச் செயலகத்தில் நேற்று ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.

செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலை மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ஆ.கார்த்திக், செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ.சங்கர், திரையரங்கு உரிமை யாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், டி.என்.ராஜா, திரைப்பட தயாரிப் பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பாரதிராஜா, ஐசரி கணேஷ், கே.ராஜன், ஜே.எஸ்.கே., உள்துறை (திரைப்படம்) துணைச் செயலாளர் குணசேகர், மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் உல.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:

திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் முறையை செயல்படுத்துவது தொடர்பாக திரையரங்கு உரிமை யாளர்கள், திரைப்படத் தயாரிப் பாளர்கள், இயக்குநர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அரசின் முடிவுக்கு அவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த திட்டத்துக்கு ஒரு வாரத் துக்குள் இறுதி வடிவம் கொடுக் கப்பட்டு மீண்டும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி இதை நடை முறைப்படுத்தும் பணியை அரசு தொடங்கும்.

ரயில், பேருந்துகளுக்கு ஆன் லைனில் டிக்கெட் எடுக்கும் பழக்கத்துக்கு மக்கள் வந்துள்ள னர். தமிழகத்தில் உள்ள 977 திரை யரங்குகளிலும் ஒரு நாளில் ஓடக்கூடிய காட்சிகள் எத்தனை, விற்பனையாகும் டிக்கெட்கள் எத்தனை என்பதை அறிந்து கொள் ளும் வசதியை முதல்முறையாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இத்திட்டம் நிறைவேறும்போது திரையரங்குகளிலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்கும் நிலை உருவாகும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். திரையரங்குகளில் விற்பனையாகும் உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருப்பது குறித்து அடுத்து நடை பெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து தீர்வு காணப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

பாரதிராஜா கருத்து

ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பாரதிராஜா கூறிய தாவது:

திரையரங்க டிக்கெட்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற் பனை செய்ய வேண்டும் என்கிற அரசின் முடிவு நவீன சிந்தனையாக உள்ளது. அதற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி கூறியுள்ளோம். எங்களிடமும் சில ஆலோசனைகளை அரசு தரப்பில் கேட்டனர். அதற்கான வழிமுறைகளை கூறியுள்ளோம். அரசின் இந்த செயல்பாட்டை பாராட்டியே ஆக வேண்டும்.

இதுதொடர்பாக விநியோகஸ் தர்கள், திரையரங்க உரிமையாளர் கள், தயாரிப்பாளர்கள் எல்லோரி டமும் ஆலோசனை நடத்த வழி வகை செய்திருப்பதும், எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் வியா பாரத்தை முறைப்படுத்த நடவ டிக்கை எடுத்திருப்பதும் பாராட் டும்படியாக உள்ளது.

இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in