

சென்னை
பைக்கில் செல்பவர்கள் ஹெல் மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஒருவர் அக்கறையுடனும் எதார்த்தமாக வும் பேசும் விழிப்புணர்வு வீடியோ சமூக வலை தளங் களில் தற்போது வைரலாகி வருகிறது.
விபத்துகளையும் விபத்து உயிரிழப்புகளையும் தடுக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் தொடர்பாக போக்குவரத்து போலீஸாரின் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன் றம் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், சென்னை மாதவரம் ரவுண்டானாவில் நின்றபடி மாதவரம் போக்குவ ரத்து காவல் உதவி ஆணையர் ஜே.பி.பிரபாகர் பேசும் வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங் களில் தற்போது வைரலாகி வருகிறது. பல ஆயிரக்கணக் கானோர் அதை பார்த்து விட்ட னர்.
கடந்த 19-ம் தேதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு செய்யும் உதவி ஆணையர் ஜே.பி.பிரபாகர் பேசியதாவது:
பைக்கில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். விபத்து ஏற்பட்டால் அவர்களுக்குத்தான் அதிக சேதம் ஏற்படும். பைக்கில் யாரும் எதிரியை அழைத்துச் செல்வதில்லை. நமது குடும்ப உறுப்பினரை, நண்பர்களைத் தான் அழைத்துச் செல்கிறோம். எனவே, கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தரமான, சரியான அளவுள்ள ஹெல்மெட் டுகளை அணிய வேண்டும். 100 சதவீத ஹெல்மெட் அணிய வேண்டும், 100 சதவீத விபத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். நீங்கள் விபத்தில் சிக்கி விடக்கூடாது. உங்கள் குடும்பத்துக்கு தலைமகன் வேண்டும் என்பதற்காக இது போன்று விழிப்புணர்வு செய் கிறோம்.
ஒரு மணி நேரத்துக்கும் மேல் பயணித்து அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் பைக் பயணத்தை தவிர்க்க வும். நமது சாலை அமைப் புக்கு தகுந்த பைக்குகளை தேர்வு செய்து இயக்கவும். பய ணிப்பதற்காக பைக் வாங்க வேண்டும். ரேசுக்காக வாங்கக் கூடாது. முன்னேயும் பின்னே யும் குழந்தைகளை வைத்து பைக்கில் பயணிப்பதும் ஆபத் துதான்.
இவ்வாறு பல்வேறு அறிவு ரைகளுடன் எடுத்துரைக்கிறார். மேலும் மக்கள் மனது புண் படாத வகையில், நகைச்சுவை உணர்வுடன் நட்புணர்வோடும் அன்போடும் விழிப்புணர்வு செய்த போக்குவரத்து காவல் உதவி ஆணையர் பிரபாகருக்கு பொதுமக்களும் போலீஸ் அதிகாரிகளும் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.
இதுகுறித்து உதவி ஆணை யர் பிரபாகர் கூறும்போது, ‘‘வாகன ஓட்டிகள் வீட்டில் இருந்து வெளியே புறப்படுவது போல் வீடு திரும்ப வேண்டும். ஒவ்வொரு தனி நபரின் பின் னும் ஒரு குடும்பம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு செய்து வருகி றோம். 100 சதவீத உயிர் இழப் புகளை தடுப்பதே எங்களது நோக்கம்’’ என்றார்.