

சென்னை
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானி நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமானியை, மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பி யுள்ளது.
இந்நிலையில் வி.கே. தஹில் ரமானியை சென்னை யில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது என வலியு றுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வைகை, என்ஜிஆர் பிரசாத், சுதா ராமலிங்கம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அதில், “இந்தியாவில் உள்ள மூத்த நீதிபதிகளில் ஒரு வராக வி.கே.தஹில் ரமானி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவரை 3 நீதி பதிகள் மட்டும் உள்ள மேகா லயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைத்திருப்பது ஏற்றுக் கொள்ளதக்கது அல்ல. எனவே அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிட ஆவண செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற் றும் முடிவை எதிர்த்து வி.கே. தஹில் ரமானி தனது பதவில் இருந்து ராஜினாமா செய்ய வுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது நெருங்கிய நண் பர்களுடன் ஆலோசித்து வரு வதாகக் கூறப்படுகிறது.