

சென்னை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண் டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பள்ளிக்கல்வித் துறை சார் பில் சிறந்த ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு நல்லா சிரியர் விருதுக்கு 377 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து விழாவில் செங் கோட்டையன் பேசியதாவது:
கல்வி மேம்பாட்டுக்காக பல் வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இன் றைய காலகட்டத்தில் பல்வேறு இடர்பாடுகளை ஆசிரியர்கள் சந்தித்து வருகின்றனர். மாணவர் களை சத்தம் போட்டு கண்டிக்க முடியாத அளவுக்கு சிரமங்கள் உள்ளன. இத்தகைய சிக்கல் களுக்கு இடையே ஆசிரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருவது பாராட்டுக்குரியது.
ஆசிரியர்களுக்கு மடிக்கணினி
ஆசிரியர்கள் பாதுகாப்பு நலன் சார்ந்து அரசு சார்பில் சில நடவ டிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. தற்போது முதுநிலை ஆசிரியர் களுக்கு மடிக்கணினிகள் வழங் கப்பட்டுள்ளன.
இதையடுத்து அரசு, அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன் அரசுப்பள்ளி களுக்கு 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் விரைவில் வழங்கப் படும். ஆசிரியர்கள் அரசுடன் இணைந்து தங்கள் பணிகளை சிறப்பாக செய்தால், கல்வியில் சிறந்து விளங்கும் நாடான பின் லாந்தைவிட தமிழகம் கல்வியில் முன்னோடியாக மாறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.